டிவிஎஸ் மோட்டார் மற்றும் பிஎம்டபிள்யூ கூட்டணியில் விற்பனைக்கு வந்த அப்பாச்சி ஆர்ஆர் 310 அடிப்படையில் நேக்டூ ஸ்போர்ட்டிவ் மாடலாக அப்பாச்சி ஆர்டிஆர் 310 சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற படங்கள் வெளியாகியுள்ளது.
பிஎம்டபிள்யூ நிறுவனம், ஜி 310 ஆர் ஸ்போர்ட்டிவ், ஜி 310 ஜிஎஸ் அட்வென்ச்சர் மற்றும் ஃபேரிங் ஸ்டைல் ஜி 310 ஆர்ஆர் என மூன்று மாடல்கள் விற்பனை செய்து வரும் நிலையில் டிவிஎஸ், ஃபேரிங் செய்யப்பட்ட மாடலை மட்டும் விற்பனை செய்து வருகின்றது.
TVS Apache RTR 310
சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்படுகின்ற ஆர்டிஆர் 310 பைக்கில் மிக நேர்த்தியான முரட்டுத்தனத்தை வெளிப்படுகின்ற வடிவமைப்பினை கொண்டுள்ளது. ஸ்போர்ட்டிவான இரு பிரிவுகளை பெற்ற எல்இடி ஹெட்லைட் கொண்டு வந்துள்ளது.
லிக்யூடு கூல்டு 312cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் RR 310 பைக்கில் இடம்பெற்றுள்ள அதே என்ஜினை பகிர்ந்து கொள்ள உள்ளது. எனவே, இந்த மாடல் 34hp மற்றும் 27.3Nm டார்க் வழங்கும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பெற்றிருக்கும்.
அடுத்த, சில வாரங்களில் உற்பத்தி நிலை அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.
மேலும், ஆகஸ்ட் 23 ஆம் தேதி டிவிஎஸ் நிறுவனம் க்ரியோன் கான்செப்ட் அடிப்படையில் என்டார்க் எலக்ட்ரிக் அறிமுகம் செய்யப்படலாம்.
image source – instagram/nadeemalvivlogs