இந்தியாவின் முன்னணி வர்த்தக வாகன தயாரிப்பாளரான அசோக் லேலண்ட் , நமது இந்திய ரானுவத்திடமிருந்து ரூபாய் 800 கோடி மதிப்பில் Field Artillery Tractor (FAT 4×4) மற்றும் Gun Towing Vehicle (GTV 6×6) வாகனங்களை வழங்க பெற்றுள்ள ஆர்டரை அடுத்த 12 மாதங்களுக்குள் டெலிவரி செய்ய உள்ளது.
FAT 4×4 மற்றும் GTV 6×6 என இரு விதமான பிரிவில் ஊர்தியில் இலகுரக துப்பாக்கி மற்றும் நடுத்தர துப்பாக்கிகள் பொருத்தியிருக்கும் பீரங்கி வாகனங்களாகும்.
Ashok Leyland Defence
அசோக் லேலண்டின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஷேனு அகர்வால் கூறுகையில், லேலண்ட் பாதுகாப்பு வணிகம் வளர்ச்சிக்கு வலுவான தூணாக உள்ளது, இந்த வெற்றியானது பாதுகாப்பு வாகனங்கள் வணிகத்தில் அசோக் லேலண்டின் தலைமையை மேலும் நிலைநிறுத்துகிறது என்றும் குறிப்பிட்டார்.
அசோக் லேலண்டின் பாதுகாப்பு வணிகத்தின் தலைவர் அமந்தீப் சிங், இந்திய ஆயுதப் படைகளின் பல்வேறு பயன்பாடுகள் மற்றும் செயல்பாட்டு தேவைகளுக்கு ஏற்ப 4×4, 6×6, 8×8, 10×10 & 12×12 வரையிலான மொபிலிட்டி பிளாட்பார்ம்களை மேம்படுத்துவதில் முதலீடு செய்துள்ளது என்று கூறினார்.
800 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை அடுத்த 12 மாதங்களில் டெலிவரி வழங்க உள்ளதாக அசோக் லேலண்ட் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வாகனங்கள் லேலண்டின் உள்நாட்டில் கொண்டு தயாரிக்கப்பட்ட அதிநவீன ஆயுதங்களை கொண்டு செல்லும் பாதுகாப்பு வாகனங்களாகும்.
சமீபத்தில், மஹிந்திரா நிறுவனம் 1850 ஸ்கார்பியோ கிளாசிக் கார்களை தயாரிக்க ஆர்டரை பெற்றிருந்தது.