பஜாஜ் டிரையம்ப் கூட்டணியில் உருவான ஸ்பீடு 400 பைக்கின் முன்பதிவு 15,000 எண்ணிக்கையை கடந்துள்ளதால், முதற்கட்டமாக மாதம் 5,000 என்ற உற்பத்தி இலக்கை 10,000 ஆக விரைவில் உயர்த்த பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது.
ஸ்பீடு 400 அறிமுகத்தின் பொழுது பேசிய பஜாஜ் தலைவர் ராஜீவ் பஜாஜ் கூறுகையில், மாதம் 5,000 எண்ணிக்கையில் உற்பத்தி செய்து நடப்பு நிதியாண்டில் 40,000-45,000 பைக்குகளை டெலிவரி செய்ய திட்டமிட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
Triumph Speed 400 Production Ramp up
இங்கிலாந்தின் டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்துடன் இணைந்து பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தயாரித்துள்ள டிரையம்ப் பட்ஜெட் விலை பைக் மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் 10,000 புக்கிங் எண்ணிக்கையை விரைவாக கடந்த நிலையில் அடுத்த 5,000க்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளது.
தொடர்ந்து அதிகரிக்கும் வரவேற்பினை ஈடுகட்ட விரைவாக டெலிவரியை அதிகரித்து மாதம் 10,000 க்கு கூடுதலான எண்ணிக்கையில் டிரையம்ப் பைக்குகளை தயாரிக்கவும், நடப்பு நிதியாண்டில் 1,00,000-1,20,000 வரையிலான பைக்குகளை விற்பனை செய்யவும் திட்டமிடப்படுள்ளது.
TR சீரிஸ் என்ஜின் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. ட்ரையம்ப் ஸ்பீட் 400 பைக்கின் மைலேஜ் 30 Kmpl வழங்கும்.