ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் புதிய டியோ 125cc என்ஜின் பெற்ற புதிய ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
2024 Honda Dio 125
டியோ 110 ஸ்கூட்டரின் அடிப்படையில் சில ஸ்டைலிஷான சிறிய அளவிலான மாற்றங்களை கொண்டு புதிய நிறங்களை பெற்றதாக ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டரில் OBD2 மற்றும் இ20 எரிபொருளுக்கு இணக்கமான, 125cc, ஒற்றை சிலிண்டர், eSP (மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் பவர்) கொண்ட ஏர் கூல்டு இன்ஜின் பெற்று ஹோண்டா ஏசிஜி ஸ்டார்டர், மேம்படுத்தப்பட்ட டம்பிள் ஃப்ளோ, உராய்வு குறைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட எரிப்பு மற்றும் சோலனாய்டு வால்வுகள் ஆகியவற்றை பெற்ற 123.92cc இன்ஜின் பவர் 8.16 bhp at 6250 rpm மற்றும் 10.4 Nm டார்க் at 5000 rpm வழங்குகின்றது.
டியோ 125சிசி மாடலில் ஹோண்டா லோகோ ஆனது ஃபுளோர் போர்டிலும், 110 மாடலில் முன்புற அப்ரானிலும் உள்ளது. சில ஸ்டைலிஷான பாடி கிராபிக்ஸ் ஆனது வழங்கப்பட்டுள்ளது.
டியோ 125 மாடலில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு பல்வேறு மேம்பட்ட தகவல் கிடைக்கின்றது. பெட்ரோல் இருப்பின் அளவு, சராசரி எரிபொருள் மைலேஜ் & நிகழ்நேரத்தில் கிடைக்கின்ற மைலேஜ் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். ட்ரிப் மீட்டர், கடிகாரம், சைட் ஸ்டாண்ட் இண்டிகேட்டர், ஸ்மார்ட் கீ மற்றும் பேட்டரி இண்டிகேட்டர், ஈக்கோ இண்டிகேட்டர் மற்றும் சர்வீஸ் இண்டிகேட்டர் போன்ற விவரங்களை மீட்டர் காட்டுகிறது.
ஹெச்-ஸ்மார்ட் எனப்படுகின்ற அம்சத்தின் மூலம், ஸ்மார்ட் ஃபைண்ட் – ஸ்கூட்டரை கண்டுபிடிக்கும் வகையில் நான்கு இண்டிகேட்டர்களும் ஒளிரும், ஸ்கூட்டரிலிருந்து 10 மீட்டருக்குள் இருந்தால், ஸ்கூட்டரின் இருப்பிடத்தை எளிதாக அறிந்து கொள்ளலாம்.
ஸ்மார்ட் அன்லாக் – ஸ்கூட்டரிலிருந்து இரண்டு மீட்டருக்குள் இருந்தால், கைப்பிடியை லாக் திறக்கலாம், மேலும் பெட்ரோல் டேங்க் மூடி மற்றும் இருக்கையையும் திறக்கலாம்.
ஸ்மார்ட் சேஃப் – ஸ்கூட்டரில் இருந்து இரண்டு மீட்டருக்குள் இருப்பதால் உங்கள் ஸ்கூட்டரை இயக்கலாம். தூரம் அதிகரிக்கும் பொழுது ஸ்கூட்டர் தானாகவே பூட்டிக் கொள்ளும், ஒருவேளை ஸ்கூட்டரை லாக் செய்ய வேண்டும் என்றால் மூன்று வினாடிகளுக்கு பொத்தானை அழுத்துவதன் மூலம் இந்த அம்சத்தையும் செயல்படுத்தலாம்.
ஸ்மார்ட் ஸ்டார்ட் – கீ இல்லாமல் டியோ 125 ஸ்கூட்டரை ஆன் செய்ய, ஸ்டார்ட் பட்டனை அழுத்தினால் போதும்.
டியோ 125 ஸ்கூட்டரில் முன்பக்கத்தில் 190 மிமீ டிஸ்க் பிரேக்குடன் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக் கொண்டதாக உள்ளது. ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம் ஆனது கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக 90/90-12 54J மற்றும் 90/100-10 53J ட்யூப்லெஸ் பெற்றதாக உள்ளது.
டியோ 125 மாடலின் பரிமாணங்கள் நீளம் 1,830mm அகலம் 723mm உயரம் மற்றும் 1,172mm, 1260 mm வீல்பேஸ் கொண்டு கிரவுண்ட் கிளியரண்ஸ் ஆனது 171 மிமீ கொண்டதாக டியோ 125 ஆனது 104 கிலோ கொண்டதாக விளங்குகின்றது.
புதிய டியோ 125 ஸ்கூட்டரில் HMSI நிறுவனம் 10 ஆண்டு உத்தரவாதத் தொகுப்பை (3 ஆண்டுகள் + 7 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம்) வழங்குகிறது.
Dio 125 STD 3D EMBLEM- ₹ 86,900
Dio 125 STD – ₹ 87,350
Dio 125 Smart 3D EMBLEM – ₹ 94,800
Dio 125 Smart- ₹ 95,250
(எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)
ஹோண்டா டியோ 125 நுட்பவிபரங்கள்
என்ஜின் | |
வகை | ஏர் கூல்டு, 4 stroke |
Bore & Stroke | 47.000 x 63.121 mm |
Displacement (cc) | 123.92 cc |
Compression ratio | 10.0:1 |
அதிகபட்ச பவர் | 8.16 hp (5.8 Kw) at 6,250 rpm |
அதிகபட்ச டார்க் | 10.4 Nm at 5,000 rpm |
எரிபொருள் அமைப்பு | Fuel injection (FI) |
டிரான்ஸ்மிஷன் & சேஸ் | |
ஃபிரேம் | அண்டர் போன் |
டிரான்ஸ்மிஷன் | ஆட்டோமேட்டிக் |
கிளட்ச் | டிரை டைப் |
சஸ்பென்ஷன் | |
முன்பக்கம் | டெலிஸ்கோபிக் |
பின்பக்கம் | யூனிட் ஸ்விங் |
பிரேக் | |
முன்புறம் | டிஸ்க் 190 mm |
பின்புறம் | டிரம் 130 mm (with CBS) |
வீல் & டயர் | |
சக்கர வகை | அலாய் |
முன்புற டயர் | 90/90-12 54J ட்யூப்லெஸ் |
பின்புற டயர் | 90/90-10 53J ட்யூப்லெஸ் |
எலக்ட்ரிக்கல் | |
பேட்டரி | 12V-3Ah MF பேட்டரி |
ஸ்டார்டர் வகை | எலக்ட்ரிக் செல்ஃப் |
பரிமாணங்கள் | |
நீளம் | 1830 mm |
அகலம் | 707 mm |
உயரம் | 1172 mm |
வீல்பேஸ் | 1260 mm |
இருக்கை உயரம் | 765 mm |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 160 mm |
எரிபொருள் கொள்ளளவு | 5.3 litres |
எடை (Kerb) | 104 kg |
ஹோண்டா டியோ 125 நிறங்கள்
பேரல் சைரன் நீலம், கிரே, நைட் ஸ்டார் பிளாக், ப்ளூ மெட்டாலிக், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக், மேட் சங்ரியா ரெட் மெட்டாலிக் & ஸ்போர்ட்ஸ் ரெட் என 7 விதமான வண்ண விருப்பங்கள் இரண்டு வகைகளிலும் கிடைக்கும்.
2024 Honda Dio 125 on-Road Price Tamil Nadu
ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் மற்ற மாவட்டங்களுக்கும் புதுச்சேரி மாநிலத்துக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.
Dio 125 STD 3D EMBLEM- ₹ 1,06,988
Dio 125 STD – ₹ 1,07,465
Dio 125 Smart 3D EMBLEM – ₹ 1,15,820
Dio 125 Smart- ₹ 1,16,328
(All Prices On-road Tamil Nadu)
Dio 125 STD 3D EMBLEM- ₹ 96,410
Dio 125 STD – ₹ 97,010
Dio 125 Smart 3D EMBLEM – ₹ 1,03,987
Dio 125 Smart- ₹ 1,04,589
(All Prices on-road Pondicherry)
2024 Honda Dio 125 Rivals
125cc பிரிவில் டிவிஎஸ் என்டார்க், சுசூகி அவெனிஸ், யமஹா ரே இசட்ஆர் மற்றும் ஸ்டீரிட் ரேலி, மற்றும் ஏப்ரிலியா SR 125 ஆகியவற்றுடன் மற்ற 125சிசி மாடல்களான, ஆக்சஸ் 125, ஜூபிடர் 125, டெஸ்டினி 125, ஃபேசினோ 125 மற்றும் ஆக்டிவா 125 என பல்வேறு மாடல்கள் உள்ளன.
Faq ஹோண்டா டியோ 125
Warning: Undefined array key "name" in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/seo-by-rank-math-pro/includes/modules/schema/shortcode/faqpage.php on line 31
Warning: Undefined array key "text" in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/seo-by-rank-math-pro/includes/modules/schema/shortcode/faqpage.php on line 32
2024 ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டர் மைலேஜ் எவ்வளவு ?
125சிசி என்ஜின் கொண்ட ஹோண்டா Dio 125 மைலேஜ் லிட்டருக்கு 45 Kmpl எதிர்பார்க்கலாம்.
ஹோண்டா டியோ 125 என்ஜின் பவர் & டார்க் ?
ஹோண்டா டியோ 125 மாடலில் உள்ள 123.92cc என்ஜிஃ 8.16 bhp at 6250 rpm 10.4 Nm at 5000 rpm.
டியோ 125 ஸ்கூட்டர் போட்டியாளர் யார் ?
125cc பிரிவில் டிவிஎஸ் என்டார்க், சுசூகி அவெனிஸ், யமஹா ரே இசட்ஆர் மற்றும் ஸ்டீரிட் ரேலி, மற்றும் ஏப்ரிலியா SR 125
டியோ 125 Vs டியோ 110 வித்தியாசம் என்ன ?
டியோ 110சிசி என்ஜினும் மற்றபடி டியோ 125 மாடலுக்கு 125சிசி என்ஜின் வித்தியாசத்தை தவிர டிசைனில் மாற்றமில்லாமல், புதிய பாடி கிராபிக்ஸ் மட்டுமே உள்ளது.
ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ?
டியோ 125 ஆன்-ரோடு விலை ₹ 1.07 லட்சம் – ₹ 1.17 லட்சம் வரை உள்ளது.
2023 Honda Dio 125 Scooter Image Gallery
Last Updated 2024-08-31