கியா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய செல்டோஸ் எஸ்யூவி மாடலுக்கு ஜூலை 14 ஆம் தேதி முன்பதிவு தொடங்கி நிலையில் முதல் நாளில் மட்டுமே 13,424 புக்கிங் பெற்று அசத்தியுள்ளது.
முன்பாக செல்டோஸ் வைத்திருப்பவர்கள் மீண்டும் செல்டோஸ் வாங்க K-Code திட்டம் மூலம் 1973 முன்பதிவு நடைபெற்று உள்ளது.
Kia Seltos bookings
செல்டோஸ் எஸ்யூவி மாடல் இந்திய சந்தையில் கடுமையான போட்டியாளர்கள் பெற்றிருந்தாலும், தொடர்ந்து சிறப்பான வரவேற்பு பெற்றுள்ளதை முதல் முன்பதிவில் உறுதிப்படுத்தியுள்ளது.
1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்களால் இயக்கப்படுகிறது. கூடுதலாக, புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் விருப்பத்தையும் வழங்குகிறது.
டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மற்றும் CVT ஆகியவை அடங்கும், டாப் டர்போ-பெட்ரோல் யூனிட் iMT அல்லது 7-ஸ்பீடு DCT உடன் வரவுள்ளது.
கியா மோட்டார்ஸ் செல்டோஸ் எஸ்யூவி மாடலுக்கு முன்பதிவு துவங்கப்பட்டு ரூ.25,000 கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. செல்டோஸ் விலை ரூ 10 லட்சம் விலையில் துவங்கலாம்.