ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற டர்ட் பைக் மாடலான கவாஸாகி KLX 230RS இந்திய சந்தையில் ரூ.5.21 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மூடப்பட்ட சாலைகள், டிராக்குகளில் மட்டும் பயன்படுத்த முடியும். மற்றபடி, பொது சாலைகளில் இயக்க இயலாது.
சிறப்பான ஆஃப் ரோடு அனுபவத்தை விரும்பும் சாகச பிரியர்களுக்கான டிரட் பைக்குகளை கவாஸாகி KX , KLX என இரண்டு பிரிவில் 2 ஸ்ட்ரோக் மற்றும் 4 ஸ்ட்ரோக் என இரண்டிலும் விற்பனை செய்து வருகின்றது. இந்நிறுவனம் KLX110, KLX140G, மற்றும் KLX450R, அடுத்து KX65, KX100 KX112, KX250 மற்றும் KX450 ஆகியவை கிடைக்கின்றது.
Kawasaki KLX 230RS
KLX 230RS பைக் டிராக்கில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய மாடல் என்பதால், ஹெட்லைட், டெயில் லைட், டர்ன் இண்டிகேட்டர், மற்றும் ரியர்வியூ கண்ணாடி போன்றவை இல்லாத மாடலாகும். குறைந்த பாடிவொர்க், உயரமான முன் ஃபெண்டர், ஃபோர்க் கெய்ட்டர்கள், அப்ஸ்வெப்ட் டெயில் பேனல், எக்ஸாஸ்ட் கேனிஸ்டருக்கான மேல்நோக்கிய அமைப்பு மற்றும் வயர் ஸ்போக் வீல் கொண்டுள்ளதாகும்.
21-இன்ச் முன் மற்றும் 18-இன்ச் பின்புற சக்கரத்திலும் டியூப் டயர் கொடுக்கப்பட்டு KLX 230RS பைக்கில் முன்புற ஃபோர்க், பின்புற மோனோ ஷாக் ஆகியவை பெற்றுள்ளது. இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. 20 PS பவர் வழங்கும் 233சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் பெற்றுள்ளது.
கவாஸாகி KLX 230RS பைக் விலை ₹ 5.21 லட்சம் ஆகும்.