முன்பாக பைக் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹோண்டா டியோ 125 அல்லது ஹோண்டா வேரியோ 160 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என புதிய டீசர் மூலம் உறுதியாகியுள்ளது.
மேக்ஸி ஸ்டைல் ஸ்கூட்டரை போன்றே காட்சியளிக்கின்ற இருக்கை அமைப்பினை வெளிப்படுத்தும் டீசர் அமைந்தாலும், டியோ டிசைனை பெற்ற 125cc ஸ்கூட்டராக இருக்கலாம் என கூறப்படுகின்றது.
Honda Dio 125 or Vario 160
டிவிஎஸ் என்டார்க் 125 மற்றும் சுசூகி அவெனிஸ் போன்ற 125cc ஸ்கூட்டர்களை எதிர்கொள்ளும் வகையிலான ஸ்கூட்டராக வரக்கூடிய புதிய மாடல் மிகவும் ஸ்போர்ட்டிவான தோற்ற அமைப்பினை கொண்டதாக விளங்குகலாம்.
டீசரில் கொடுக்கபட்டுள்ள எக்ஸ்ஹாஸ்ட் நோட் மிகவும் சிறப்பான சபதம் வெளிப்படுத்துகின்றதாக உள்ளது.
தற்சமயம் ஆக்டிவா 125 மற்றும் கிரேசியா 125 என இரண்டு 125சிசி ஸ்கூட்டர்களை கொண்டுள்ளது. இரண்டுமே 8.2hp மற்றும் 10.4Nm டார்க் வெளிப்படுத்தும் 124cc என்ஜினைப் பயன்படுத்துகின்றன.
அல்லது மேக்ஸி ஸ்டைலை பெற்றதாக ஹோண்டா வேரியோ 160 ஆக கூட அமைந்திருக்கலாம்.
என்டார்க், அவெனிஸ் ஆகியவற்றை எதிர்கொள்ளுவதுடன் அடுத்த சில மாதங்களில் ஹீரோ ஜூம் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியாக உள்ளது. அடுத்த சில நாட்களுக்குள் புதிய ஸ்கூட்டர் பற்றி முழு தகவலும் வெளியாகலாம்.