மாருதி சுசூகி எர்டிகா காரின் அடிப்படையிலான டொயோட்டா ரூமியன் (Toyota Rumion) எம்பிவி இந்திய சந்தையில் விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் வரவுள்ளது. சமீபத்தில் இன்னோவா ஹைக்ராஸ் காரின் அடிப்படையிலான மாருதி இன்விக்டோ விற்பனைக்கு வெளியானது.
சுசூகி-டொயோட்டா கூட்டணியில் பல்வேறு மாடல்கள் ரீபேட்ஜ் செய்யப்பட்டு இந்தியா உட்பட பல்வேறு சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றது. அந்த வரிசையில், இந்திய சந்தையில் மாருதி பலேனோ கார் கிளான்ஸா பெயரிலும், அர்பன் க்ரூஸர் ஹைரைடர் எஸ்யூவி மாருதி கிராண்ட் விட்டாரா, இன்னோவா ஹைக்ராஸ் மாருதி இன்விக்டோ பெயரிலும் வந்துள்ளது.
Toyota Rumion
தென் ஆப்பரிக்காவில் ஏற்கனவே எர்டிகா அடிப்பையிலான மாடலை ருமியன் என பெயரிட்டு மாருதி சுசூகி தயாரிக்க டொயோட்டா ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு ஏற்றுமதி செய்து வருகின்றது. இந்த மாடலை இந்திய சந்தையில் வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு கொண்டு வர டொயோட்டா திட்டமிட்டுள்ளது.
முகப்பு கிரில் அமைப்பு, புதிய அலாய் வீல், இன்டிரியரில் கருப்பு நிற டேஸ்போர்டு உட்பட பல்வேறு சிறிய அளவிலான மாற்றங்களை பெற்று சுசூகி பேட்ஜ்க்கு பதிலாக டொயோட்டா லோகோ சேர்க்கப்பட்டிருக்கின்றது.
புதிய ரூமியன் காரில் 1.5 லிட்டர் டூயல் ஜெட் என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பத்துடன் வருவதால், 6000rpm-ல் 103 hp பவரையும், 4400rpm-ல் 136.8 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு கூடுதலாக, பேடல் ஷிஃப்டர்டன் புதிய 6-வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆக மாற்றப்பட்டுள்ளது.
எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் மேனுவல் கியர்பாக்ஸ் மூலம் 20.51kpl மற்றும் ஆட்டோமேட்டிக் 20.30kpl மைலேஜ் வழங்கும் என்று கூறப்படுகிறது. எனவே, இதே மைலேஜ் ஆனது டொயோட்டா ரூமியன் வெளிப்படுத்தும்.
கூடுதலாக சிஎன்ஜி ஆப்ஷன் பெறும் பொழுது CNG இல் இயங்கும் போது 87hp மற்றும் 121.5Nm டார்க் ஆகும். சிஎன்ஜி 5-ஸ்பீடு மேனுவலுடன் மட்டுமே வருகிறது. கிலோவிற்கு 26.11 கிமீ மைலேஜ் என்று கூறப்படுகிறது.
மாருதி எர்டிகா காரின் விலை ரூ. 8.64 லட்சம் முதல் 13.08 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றது.