போலோ காரினை அடிப்படையாக கொண்ட ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடான் கார் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி வருகின்றது. அமியோ கார் 17 இடங்களில் வருகின்ற மே 12,2016 முதல் ஜூலை 2,2016 வரை காட்சிக்கு வருகின்றது.
தமிழகத்தில் ஃபோக்ஸ்வேகன் அமியோ கார் சென்னை , கோவை நகரங்களிலும் மற்ற மாநிலங்களில் பெங்களூரு , புனே , டெல்லி , மும்பை , கோல்கத்தா , சண்டிகர் , கொச்சின் , சூரத் , லக்னோ , அகமதாபாத் , ஹைத்திராபாத் , லூதினா , புவேனஸ்வர் , ஜெய்ப்பூர் மற்றும் நாக்பூர் என மொத்தம் 17 இடங்களில் காட்சிக்கு வருகின்றது. அதனை தொடர்ந்து அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.
இதில் 73Bhp ஆற்றலை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 89Bhp ஆற்றலை வழங்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் போன்றவற்றை பெற்றுள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7 வேக DSG ஆட்டோ கியர்பாக்சினை கூடுதலாக பெற்றுள்ளது. முதற்கட்டமாக பெட்ரோல் மாடல் மட்டுமே விற்பனைக்கு வருகின்றது. டீசல் என்ஜின் மாசு உமிழ்வு பிரச்சனையால் மேம்படுத்தப்பட உள்ளதால் காலதாமதமாக வரவுள்ளது.
அமியோ காருக்கான பிரத்யேக செயலி கூகுள் பிளே மற்றும் ஐஓஎஸ் ஸ்டோர்களில் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது டீலர்கள் வாயிலாக அமியோ காருக்கு முன்பதிவு வருகின்ற மே 12, 2016 முதல் தொடங்குகின்றது. டிசையர் , எக்ஸ்சென்ட் , அமேஸ் மற்றும் ஆஸ்பயர் போன்ற கார்களுக்கு போட்டியாக அமியோ கார் நிலைநிறுத்தப்பட உள்ளது.