ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய எக்ஸ் 440 பைக்கிற்கு முன்பதிவு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாக துவங்கப்பட்டுள்ளது.ஹார்லி டீலர்கள் மற்றும் ஹீரோவின் முன்னணி நகரங்களில் உள்ள டீலர்கள் மூலமாகவும் புக்கிங் துவங்கப்பட்டுள்ளது.
எக்ஸ்440 பைக்கிற்கு போட்டியாக ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, சூப்பர் மீட்டியோர் 350, ஜாவா மற்றும் யெஸ்டி பைக்குகள், ஹோண்டா சிபி 350, ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.
ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 440சிசி ஒற்றை லாங் ஸ்ட்ரோக் என்ஜின் அதிகபட்சமாக 6000 rpm-ல் 27 bhp பவர் மற்றும் 4000rpm-ல் 38 Nm டார்க் வெளிப்படுத்தலாம். இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
இந்த மாடலில், எல்இடி ஹெட்லைட், யூஎஸ்பி போர்ட், டூயல் சேனல் ஏபிஎஸ், ஆட்டோ ஹெட்லேம்ப் ஒளிரும் வசதி ஆகியவற்றை கொண்டுள்ளது.
முன்பக்கத்தில் 43mm அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பர் பெறுகிறது. இதில் ப்ரீ-லோடு அட்ஜெட்மென்ட் கொண்டதாக உள்ளது. முன்புறத்தில் 18 அங்குல சக்கரம் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல வீல் பெற்றுள்ளது. 320 mm டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் 240 mm டிஸ்க் பிரேக்குடன் இரட்டை சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்டிருக்கின்றது.
Harley-Davidson X440 Prices (ex-showroom)
- X440 Denim ₹. 2.29 லட்சம்
- X440 Vivid ₹. 2.49 லட்சம்
- X440 S ₹. 2.69 லட்சம்
ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 மாடலுக்கு முன்பதிவு கட்டணமாக ரூ.5,000 வசூலிக்கப்படுகின்றது. அக்டோபர் 2023 முதல் விநியோகம் தொடங்குகிறது
தமிழ்நாட்டில் எக்ஸ் 440 பைக் மாடல் சென்னை, கோயம்புத்தூர், சேலம், மதுரை, வேலூர், திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, நெய்வேலி, கடலூர், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, ஓசூர், ஈரோடு, செங்கல்பட்டு, திண்டுக்கல், நாகர்கோவில் மற்றும் காஞ்சிபுரம், காரைக்காலில் கிடைக்கும்.