சுசூகி மோட்டார் நிறுவனத்தின் , பிரசத்தி பெற்ற ஹயபுஸா சூப்பர் பைக்கின் 25வது ஆண்டு விழா பதிப்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச அளவில் 2,00,000 உற்பத்தி இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ளது.
தற்பொழுது 48க்கு மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற ஹயபுஸா மாடல் 2 இலட்சம் இலக்கை வெற்றிகரமாக கடந்து சாதித்துள்ளது.
Suzuki Hayabusa
முதல் தலைமுறை இன்டர்மோட் என்ற பெயரில் 1998 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் ஜெர்மனியில் ஹயுபஸா (GSX1300R) என்ற பெயரில் வெளியிடப்பட்டு, பிறகு, 1999 ஆம் ஆண்டு ஹயபுஸா விற்பனைக்கு வெளியானது.
தயாரிப்பு கான்செப்ட் ‘அல்டிமேட் ஸ்போர்ட்’ மாடல் ஆனது அதிகபட்ச பவர் மற்றும் ரைடிங் செயல்திறன், தனித்துவமான ஏரோடைனமிக் ஸ்டைலிங் ஆகியவற்றை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டது.
இரண்டாம் தலைமுறை மாடல் 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு 1,299cc-லிருந்து 1,340cc என்ஜின் ஆக மாற்றப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில், மூன்றாம் தலைமுறை ஹயபுசா பைக் மேம்படுத்தப்பட்ட என்ஜின் மற்றும் சேஸிஸ் மற்றும் பல்வேறு மின்னணு கட்டுப்பாடுகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. பல்வேறு மின்னணு கட்டுப்பாட்டு அமைப்பு ‘எஸ்.ஐ.ஆர்.எஸ் (சுஸுகி இன்டலிஜென்ட் ரைடு சிஸ்டம்) கொண்டுள்ளது.
இந்தியாவில் ஹயபுஸா
இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹயபுஸா பைக் மாடல், 2016-ல் பாகங்களை தருவித்து உள்நாட்டில் ஒருங்கிணைக்கப்பட துவங்கியது. 2016 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குருகிராம் ஆலையில் CKD கிட் முறையாக 11 ஆண்டுகளுக்கும் மேலாக, முதலில் இறக்குமதியாகவும், பின்னர் உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்பட்டதாகவும், இந்தியாவில் மொத்தமாக இதுவரை 1,850 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரூ.16.90 லட்சத்தில் சுசூகி ஹயபுஸா பைக் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
25வது ஆண்டு விழா பதிப்பு
பிரத்யேக 25வது ஆண்டு விழா லோகோ மற்றும் புதுப்பிக்கப்பட்ட லோகோக்கள் எரிபொருள் டேங்க் மேல் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு மஃப்லரிலும் நேர்த்தியான 25வது ஆண்டு லோகோக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பளபளப்பான கருப்பு கௌலிங் பிரேக் ரோட்டார் கேரியர்கள் மற்றும் டிரைவ் செயின் அட்ஜஸ்டர்கள் தங்க நிறத்தில் செய்யப்பட்டவை ஆக உள்ளன.