ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டுள்ள 4 வால்வுகளை பெற்ற எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக் மாடலின் என்ஜின், மைலேஜ், நிறங்கள், போட்டியாளர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
2023 Hero Xtreme 160R 4V
முன்பாக விற்பனையில் கிடைத்து வந்த எக்ஸ்ட்ரீம் 160ஆர் 2வி மாடலை அடிப்படையாக கொண்ட 4 வால்வுகளை பெற்று பல்வேறு கனெக்ட்டிவிட்டி, வசதிகள் யூஎஸ்டி ஃபோர்க் உள்ளிட்ட அம்சங்களை பெற்ற ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக்கில் ஸ்டார்ண்டர்டு, கனெக்டேட் மற்றும் புரோ என மூன்று விதமான வேரியண்ட் பெற்று பொதுவாக, 163.2cc ஏர்-ஆயில் கூல்டூ என்ஜின் அதிகபட்சமாக 8500rpm-ல் 16.9 hp பவர் மற்றும் 6500rpm-ல் 14.5 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
அனைத்து வேரியண்டுகளிலும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் 276 மிமீ டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் 220 மிமீ டிஸ்க் உள்ளது. ட்யூபெலெஸ் டயர் இடம்பெற்று முன்பக்கத்தில் 100/80-17 மற்றும் 130/80-17 பின்பக்கத்தில் உள்ளது.
ஸ்டாண்டர்டு மற்றும் கனெக்டேட் என இரண்டும் 37mm டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்பக்கத்தில் 7 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் பெற்று ஒற்றை இருக்கையுடன் புதிதாக பிளேசிங் ஸ்போர்ட்ஸ் சிவப்பு மற்றும் மேட் ஸ்லாட் கருப்பு என இரண்டு நிறங்களை கொண்டுள்ளது.
கனெக்டேட் வேரியண்டில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் ப்ளூடூத் இணைப்புடன் ஹீரோவின் டெலிமாடிக்ஸ் அம்சத்தை ஹீரோ கனெக்ட் 2.0 என்ற பெயரில் பெற்றுள்ளது. டெலிமாடிக்ஸ் செயல்பாடுகள் வாகன கண்காணிப்பு, இம்மொபைல்சேஷன், வாகனம் கண்டறிதல், பேனிக் எச்சரிக்கை, அவசரகால எச்சரிக்கை, ஓவர் ஸ்பீட் அலர்ட், திருட்டு எச்சரிக்கை, ஜியோஃபென்ஸ் எச்சரிக்கை, வாகன ஆரோக்கியம் மற்றும் பலவற்றை பெற்றுள்ளது. ஒற்றை மேட் ஸ்லேட் பிளாக் நிறத்தில் மட்டும் கிடைக்கின்றது.
எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி புரோவில் கோல்டு நிறத்திலான 37 mm KYB அப்சைடு டவுன் ஃபோர்க், ஸ்பிளிட் இருக்கையுடன் வருகிறது. முந்தைய கனெக்டேட் வேரியண்டின் மற்ற வசதிகளை பெறுகின்றது. மற்ற இரண்டு வகைகளை விட எடை கூடுதலாக 145 கிலோ உள்ளது. மேட் ஸ்லேட் பிளாக் அல்லது ஒரு நியான் ஷூட்டிங் ஸ்டார் என இரண்டு நிறங்களை தேர்வு செய்யலாம்.
2023 எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி பைக் மாடலின் பரிமாணங்கள் 2029 மிமீ நீளம், 793 மிமீ அகலம் மற்றும் 1052 மிமீ உயரம் கொண்டது. இதன் வீல்பேஸ் 1,333 மிமீ ஆகவும், இருக்கை உயரம் 795 மிமீ மற்றும் 165 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது.
Xtreme 160R 4V STD – ₹ 1,27,300
Xtreme 160R 4V connected – ₹ 1,32,800
Xtreme 160R 4V Pro – ₹ 1,36,500
(எக்ஸ்-ஷோரூம் இந்தியா)
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி நுட்பவிரங்கள்
என்ஜின் | |
வகை | ஏர் ஆயில் கூல்டு, 4 stroke |
Bore & Stroke | 66.5 mm x 497 mm |
Displacement (cc) | 163.2 cc |
Compression ratio | 10.1:1 |
அதிகபட்ச பவர் | 16.9 hp at 8500 rpm |
அதிகபட்ச டார்க் | 14.6 Nm at 6500 rpm |
எரிபொருள் அமைப்பு | Fuel injection (FI) |
டிரான்ஸ்மிஷன் & சேஸ் | |
ஃபிரேம் | டபுலெர் டைமண்ட் டைப் |
டிரான்ஸ்மிஷன் | கான்ஸ்டென்ட் மெஸ், 5 ஸ்பீடு |
கிளட்ச் | வெட் மல்டி பிளேட் |
சஸ்பென்ஷன் | |
முன்பக்கம் | டெலிஸ்கோபிக்/KYB 37mm USD |
பின்பக்கம் | மோனோ ஷாக் அப்சார்பர் |
பிரேக் | |
முன்புறம் | டிஸ்க் 276 mm (ABS) |
பின்புறம் | டிஸ்க் 228 mm |
வீல் & டயர் | |
சக்கர வகை | அலாய் |
முன்புற டயர் | 100/80-17 ட்யூப்லெஸ் |
பின்புற டயர் | 130/80-17 ட்யூப்லெஸ் |
எலக்ட்ரிக்கல் | |
பேட்டரி | 12V-6Ah (VRLA) |
ஸ்டார்டர் வகை | எலக்ட்ரிக் செல்ஃப் |
பரிமாணங்கள் | |
நீளம் | 2029 mm |
அகலம் | 793 mm |
உயரம் | 1052 mm |
வீல்பேஸ் | 1333 mm |
இருக்கை உயரம் | 795 mm |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 165 mm |
எரிபொருள் கொள்ளளவு | 12 litres |
எடை (Kerb) | 144 kg (STD/Connected) – 145 kg pro |
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி நிறங்கள்
2023 Hero Xtreme 160R 4V On-road Price in Tamil Nadu
2023 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.
- Xtreme 160R 4V STD – ₹ 1,50,110
- Xtreme 160R 4V Connected – ₹ 1,56,501
- Xtreme 160R 4V Pro – ₹ 160,570
(Tamil Nadu on-Road Price)
Hero Xtreme 160R 4V Rivals
இந்த பைக்கிற்கு போட்டியாளர்களாக எக்ஸ்ட்ரீம் 160ஆர், பஜாஜ் பல்சர் N160, பல்சர் NS160, டிவிஎஸ் அப்பாச்சி RTR 160R 4V, அப்பாச்சி RTR 160 2V, யமஹா FZ-S FI, மற்றும் சுசூகி ஜிக்ஸர் ஆகியவை உள்ளன.
மேலும் படிக்க – ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V உடன் போட்டியாளர் ஒப்பீடு
Faq Hero Xtreme 160R 4V
ஹீரோ Xtreme 160R 4V என்ஜின் விபரம் ?
Xtreme 160R 4V பைக்கில் 163.2cc ஏர் ஆயில் கூல்டூ என்ஜின் அதிகபட்சமாக 16.9 hp பவர் மற்றும் 14.5 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது
ஹீரோ Xtreme 160R 4V பைக்கின் ஆன்-ரோடு விலை ?
தமிழ்நட்டின் ஆன்ரோடு விலை Xtreme 160R 4V STD – ₹ 1,50,110, Xtreme 160R 4V Connected – ₹ 1,56,501 மற்றும் Xtreme 160R 4V Pro – ₹ ₹ 160,570
Xtreme 160R 4V போட்டியாளர்கள் யார்?
எக்ஸ்ட்ரீம் 160ஆர், பஜாஜ் பல்சர் N160, பல்சர் NS160, டிவிஎஸ் அப்பாச்சி RTR 160R 4V, அப்பாச்சி RTR 160 2V, யமஹா FZ-S FI, மற்றும் சுசூகி ஜிக்ஸர் ஆகியவை உள்ளன.