இந்தியா வரும் என எதிர்பார்க்கப்பட்ட டொயோட்டா கார்களில் ஒன்றான டொயோட்டா C-HR கிராஸ்ஓவர் எஸ்யூவி மாடல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தலைமுறை சி-ஹெச்ஆர் TNGA-C பிளாட்ஃடார்த்தில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
டொயோட்டாவின் கரோல்லா மற்றும் பிரைஸ் கார்களில் உள்ள TNGA-C பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ள சி-ஹெச்ஆர் காரில் மூன்று விதமான என்ஜின் ஆப்ஷனை பெறுகின்றது.
Toyota C-HR
இரண்டாம் தலைமுறை டொயோட்டா C-HR காரில் ப்ரியஸ் காரில் உள்ள அதே பவர்டிரெய்ன் பெறுகின்றது. 194 hp பவர் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் மற்றும் 138 hp பவர் வழங்கும் 1.8 லிட்டர் பேரலல் ஹைபிரிட் மற்றும் 223 hp பவரை வழங்கும் 2.0 லிட்டர் பிளக்-இன் ஹைப்ரிட் கொடுக்கப்பட்டுள்ளது.
2.0 லிட்டர் பேரலல் ஹைப்ரிட் வேரியண்டில் AWD விருப்பம் கிடைக்கும். இந்த காரின் ரியர் வீலில் உள்ள மின்சார மோட்டார் ஜெனரேட்டரின் காரணமாக வழுவழுப்பான சாலைகளில் கூடுதல் இழுவை மற்றும் நிலைத்தன்மையை அளிக்கிறது என டொயோட்டா கூறுகிறது.
C-HR காரில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை மையமாகக் கொண்டு 12.3-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே மற்றும் 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் டாப் வேரியண்டுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. துவக்க நிலை கார்களில் 8.0-இன்ச் தொடுதிரை சிஸ்டத்தை பெறுகின்றன.
புதிய சி-ஹெச்ஆர் இந்தியா வருகை குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை.