பஜாஜ்-ட்ரையம்ப் கூட்டணியில் தயாரிக்கப்பட்டுள்ள ட்ரையம்ப் ஸ்பீட் 400 Vs ட்ரையம்ப் ஸ்கிராம்பளர் 400 X என இரு பைக்குகளுக்கும் இடையிலான வித்தியாசங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஸ்பீடு ட்வின் 900 பைக்கின் தோற்ற உந்துதலில் ரோட்ஸ்டெர் ஸ்டைலை பெற்றுள்ள ட்ரையம்ப் ஸ்பீட் 400 மாடலும், ஸ்கிராம்பளர் 900 மாடலின் ஸ்டைலை பெற்ற ட்ரையம்ப் ஸ்கிராம்பளர் 400 X என இரண்டும் ஒரே லிக்யூடு கூல்டு 398.15cc என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றது.
Triumph Speed 400 Vs Triumph Scrambler 400 X
ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய TR சீரிஸ் என்ஜின் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் பொருத்தப்பட்டுள்ளது.
ஸ்பீட் 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் பைக்கில் ரைடு-பை-வயர் மற்றும் ஸ்விட்ச் ஆஃப் செய்யக்கூடிய டிராக்ஷன் கட்டுப்பாடு உள்ளது. டிஸ்ப்ளேவில் ஒருங்கிணைந்த எல்சிடி டிஸ்ப்ளே கியர் மற்றும் ஃப்யூல் கேஜிற்கான வசதி செயல்பாட்டு மற்றும் படிக்க எளிதாக இருக்க வேண்டும். அனைத்தும் எல்இடி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.
என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் Speed 400/ Scrambler 400x | ||
வகை | Liquid-cooled, 4 valve, DOHC, single-cylinder, FI | |
Capacity | 398.15 cc | |
Bore x Stroke | 89.0 mm x 64.0 mm | |
Compression | 12:1 | |
அதிகபட்ச பவர் | 40 PS / 39.5 bhp (29.4 kW) @ 8,000 rpm | |
அதிகபட்ச டார்க் | 37.5 Nm @ 6,500 rpm | |
கிளட்ச் | வெட் மல்டிபிள் கிளட்ச் | |
கியர்பாக்ஸ் | 6 ஸ்பீடு சிலிப்பர் அசிஸ்ட் |
சஸ்பென்ஷன், டயர், பிரேக் – ஒப்பீடு
ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் பைக்கில் ஆன்-ரோடு மற்றும் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு இரு விதமான பயன்பாடிற்கு ஏற்றதாக டயர், சஸ்பென்ஷன் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி, பிரேக்கிங் அமைப்பில் கூட வித்தியாசத்தை பெற்றுக் கொள்ளுகின்றது.
Speed 400 Vs Scrambler 400 X | ||
சேஸ் | ஹைப்ரிட் ஸ்பைன்/பெரிமீட்டர், டியூபுலர் ஸ்டீல், போல்ட்-ஆன் ரியர் சப்ஃப்ரேம் | |
ஸ்விங் ஆர்ம் | இரட்டை பக்க, கேஸ்ட் அலுமினிய அலாய் | |
முன்பக்க வீல் | கேஸ்ட் அலுமினிய அலாய் 10 ஸ்போக், 17 x 3 in | கேஸ்ட் அலுமினிய அலாய் 10 ஸ்போக் 19 x 2.5 in |
பின்பக்க வீல் | கேஸ்ட் அலுமினிய அலாய் 10 ஸ்போக், 17 x 4 in | கேஸ்ட் அலுமினிய அலாய் 10 ஸ்போக், 17 x 3.5 in |
டயர் | Metzeler Sportec M9RR | Metzeler Karoo Street |
முன்புற டயர் | 110/70 R17 | 100/90 R19 |
பின்புற டயர் | 150/60 R17 | 140/80 R17 |
முன்புற சஸ்பென்ஷன் | 43mm அப் சைடு டவுன் ஃபோர்க் 140mm wheel travel | 43mm அப் சைடு டவுன் ஃபோர்க் 150mm wheel travel |
பின்புற சஸ்பென்ஷன் | மோனோஷாக் ப்ரீ லோட் அட்ஜெஸ்ட் 130mm wheel travel | மோனோஷாக் ப்ரீ லோட் அட்ஜெஸ்ட் 150mm wheel travel |
முன்புற பிரேக் | 300mm டிஸ்க் 4 பிஸ்டன் ரேடியல் காலிப்பர், ABS | 320mm டிஸ்க் 4 பிஸ்டன் ரேடியல் காலிப்பர், ABS |
பின்புற பிரேக் | 230mm டிஸ்க் ஃபுளோட்டிங் காலிப்பர், ABS | 230mm டிஸ்க் ஃபுளோட்டிங் காலிப்பர், ABS |
பரிமாணங்கள் ஒப்பீடு
ட்ரையம்ப் ஸ்பீட் 400 பைக்கினை விட ட்ரையம்ப் ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் மாடல் என இரண்டும் மாறுபட்ட அளவுகளை பெற்றுள்ளது.
Specs | Triumph Speed 400 | Scrambler 400x |
எடை | 170 Kg | 179 Kg |
இருக்கை உயரம் | 790mm | 835mm |
கிரவுண்ட் கிளியரன்ஸ் | – | – |
நீளம் | 2,056mm | 2,117mm |
அகலம் | 795mm | 825mm |
உயரம் | 1,075mm | 1,190mm |
வீல் பேஸ் | 1,377mm | 1,418mm |
இந்தியாவில் ஜூலை 5 ஆம் தேதி ட்ரையம்ப் ஸ்பீட் 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400x பைக்கின் விலை அறிவிக்கப்படலாம். இரு பைக்குகளின் விலை ரூ. 3.00 லட்சம் முதல் ரூ. 3.50 லட்சத்திற்குள் துவங்கலாம்.