வரும் டிசம்பர் மாதம் இந்தியாவில் பிரீமியம் சந்தையில் யமஹா மோட்டார் நிறுவனம், ஃபேரிங் ஸ்டைல் R3 மற்றும் MT-03 நேக்டூ ஸ்டைல் பெற்ற இரு மாடலும் விற்பனைக்கு முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பாக விற்பனையில் இருந்த ஆர்3 பிறகு இந்தியாவிலிருந்து நீக்கப்பட்டது. மீண்டும் சில மாதங்களுக்கு முன்பாக R3, R7, R1M MT-03,MT-07 மற்றும் MT-09 வருகையை யமஹா உறுதி செய்திருந்தது. சில டீலர்கள் மூலம் முன்பதிவு நடைபெறுகின்றது.
யமஹா R3, MT-03
யமஹா இந்தியாவின் தலைவர் ஈஷின் சிஹானா, இந்த நிதியாண்டின் 2024 இறுதிக்குள் இந்தியாவில் புதிய YZF R3 மாடலை அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதாவது டிசம்பர் 2023 முதல் விற்பனைக்கு எதிர்பார்க்கிறோம்.
ஃபேரிங் ஸ்டைலை பெற்ற புதிய ஆர்3 பைக்கில் மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தக்கூடிய என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. R3 பைக்கில் உள்ள 321cc பேரலல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய 10.750 rpm-ல் அதிகபட்ச குதிரைத்திறன் 40.4 bhp, மற்றும் 9.000 rpm-ல் 29.4 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
நேக்டூ ஸ்டைல் யமஹா MT-03 மாடலிலும் இதே என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றது.
யமஹா R3 பைக்கிற்கு போட்டியாக இந்திய சந்தையில் கேடிஎம் RC 390, டிவிஎஸ் அப்பாச்சி RR 310R, கீவே K300 R கவாஸாகி நின்ஜா 400 ஆகியவற்றை எதிர்கொள்ளும்.
அடுத்தப்படியாக, யமஹா MT-03 பைக்கிற்கு சவாலாக பிஎம்டபிள்யூ G310 R, கேடிஎம் 390 டியூக், மற்றும் கீவே K300 N போன்றவை இடம்பெறுள்ளது.