இன்னோவா ஹைகிராஸ் எம்பிவி காரின் அடிப்படையில் ரீபேட்ஜ் செய்யப்பட்டுள்ள மாருதி சுஸூகி இன்விக்டோ எம்பிவி காரின் உற்பத்தியை டொயோட்டா நிறுவனம் துவங்கியுள்ளது. முதற்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட மாடல்கள் டெலிவரிக்கு தயாராகி வருகின்றது.
முன்புறத்தில் இன்விக்டோ மட்டும் புதிய கிரில் அமைப்பு சேர்க்கப்பட்டுள்ளது. மற்றபடி இன்டிரியரில் லோகோ தவிர வேறு எந்த மாற்றங்களும் இருக்காது. பின்புறத்திலும் டொயோட்டாவிற்கு பதில் சுசூகி லோகோ மட்டுமே மாறியிருக்கும்.
Maruti Suzuki Invicto
ஹைக்ராஸ் மற்றும் இன்னோவா கிரிஸ்டா கார்களுக்கு அதிகப்படியான முன்பதிவை டொயோட்டா பெற்றுள்ளதால் மாதந்தோறும் 1,000 குறைவான எண்ணிக்கையில் மட்டுமே சுசூகி என்கேஜ் கிடைக்கலாம்.
என்கேஜ் எம்பிவி காரில் 172 hp பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மற்றும் 184 hp பவர் வழங்கும் 2.0 லிட்டர் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் மூலம் இயக்கப்படுகிறது. இரண்டு இன்ஜின்களும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் – CVT கியர்பாக்ஸ் பெற்று மட்டுமே வருகின்றது.
இன்னோவா ஹைக்ராஸ் ஹைபிரிட் மைலேஜ் 23.24kpl மற்ற சாதாரன என்ஜின் மைலேஜ் 16.13kpl என உறுதிப்படுத்தியுள்ளது.
வரும் ஜூலை 5 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள இன்விக்டோ நெக்ஸா ஷோரூம் மூலமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.