டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலாக மாருதி சுஸூகி என்கேஜ் எம்பிவி விற்பனைக்கு அடுத்த சில வாரங்களுக்குள் எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பிட்ட சில எண்ணிக்கையில் மட்டும் ஹைபிரிட் வேரியண்ட் மட்டும் எதிர்பார்க்கப்படுகின்ற என்கேஜ் காரின் முன்புற கிரில் அமைப்பு கிராண்ட் விட்டாரா காரை போல அமைந்திருக்கும்.
Maruti Suzuki Engage
இன்னோவா ஹைக்ராஸ் காரில் உள்ள அதே என்ஜினை பகிர்ந்து கொள்ள உள்ளது. மாருதி சுசூகி என்கேஜ் எம்பிவி காரில் 172 hp பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மற்றும் 184 hp பவர் வழங்கும் 2.0 லிட்டர் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் மூலம் இயக்கப்படுகிறது. இரண்டு இன்ஜின்களும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் – CVT கியர்பாக்ஸ் பெற்று மட்டுமே வருகின்றது.
இன்னோவா ஹைக்ராஸ் ஹைபிரிட் மைலேஜ் 23.24kpl மற்ற சாதாரன என்ஜின் மைலேஜ் 16.13kpl என உறுதிப்படுத்தியுள்ளது.
டொயோட்டா-மாருதி சுசூகி கூட்டணியில் பல்வேறு மாடல்கள் ரீபேட்ஜ் செய்யப்பட்ட கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்கள் இந்தியா உட்பட பல்வேறு வளரும் நாடுகளில் விற்பனை செய்து வருகின்றன.
image source – instagram/andrafebriandesign