டாடா பயணிகள் வாகனப் பிரிவு 45,984 வாகனங்களை மே 2023-ல் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு மே 2022 உடன் ஒப்பீடுகையில் 6% அதிகரிப்பு 43,392 வாகனங்கள் ஆகும். ஆனால் ஏப்ரல் 2023-ல் 47,107 வாகனங்களுடன் ஒப்பிடும்போது மாதத்திற்கு மாதம் 2.38% சரிவில் உள்ளது.
எலெக்ட்ரிக் பயணிகள் வாகன சந்தையில் டாடா மோட்டார்ஸ் தொடர்ந்து பலமான சந்தையை பெற்றுள்ளது. நான்கு தயாரிப்புகளான நெக்ஸான் EV, டிகோர் EV மற்றும் Xpres-T மற்றும் ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான டியாகோ EV மாடல்கள் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளன.
மே மாதத்தில், இந்நிறுவனம் 5,805 பேட்டரி கார்களை விற்பனை செய்துள்ளது. FY2024-ல் முதல் இரண்டு மாதங்களில் மொத்தம் 12,321 யூனிட்களை விற்றுள்ளது.
மே 2022-ல் விற்பனை செய்யப்பட்ட 31,414 எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், 2023 மே மாதத்தில் வர்த்தக வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 12 சதவீதம் சரிந்து 27,570 ஆக உள்ளது. ILMCV டிரக்குகளின் விற்பனையில் 38 சதவீதம் சரிவு மற்றும் SCV கார்கோ பிக்கப் விற்பனையில் 19 சதவீதம் சரிந்தது.
ex
மறுபுறம், வர்த்தக வாகனங்களின் ஏற்றுமதி 1 சதவீதம் குறைந்துள்ளது, கடந்த மாதத்தில் 1,419 வாகனங்கள் சர்வதேச விற்பனையாகி உள்ளது. முந்தைய ஆண்டில் இதே காலத்தில் 1,404 யூனிட்கள் விற்பனையாகின.