புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா க்ரீஸ்ட்டா கார் ரூ.14.13 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2.4 லிட்டர் மற்றும் 2.8 லிட்டர் என இருவிதமான டீசல் என்ஜின் மாடல்கள் வந்துள்ளது.
கடந்த 11 ஆண்டுகளாக 6 லட்சத்திற்க்கு மேற்பட்ட உள்ளங்களை கவர்ந்த இன்னோவா காரின் புதிய தலைமுறை மாடலே இன்னோவா க்ரீஸ்ட்டா ஆகும். இந்தியாவின் நெ.1 எம்பிவி காராக விளங்கும் இன்னோவா காரின் போட்டியாளர்கள் எர்டிகா , லாட்ஜி , மொபிலியோ , வரவிருக்கும் டாடா ஹேக்ஸா (நேரடியான போட்டியாளர்) ஆகும்.
முந்தைய மாடலை விட ரூ.4.50 லட்சம் வரை கூடுதலான தொடக்க விலையில் தொடங்கியுள்ள இன்னோவா க்ரீஸ்ட்டா காரில் பாதுகாப்பு அம்சங்கள் , புதிய நவீன வசதிகள் என பலவற்றை பெற்றுள்ள க்ரீஸ்ட்டா 7 மெனுவல் மற்றும் 3 ஆட்டோமேட்டிக் என மொத்தம் 10 விதமான வேரியண்டில் வந்துள்ளது.
150hp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.4லிட்டர் என்ஜின் டார்க் 343 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 2.4 லிட்டர் இன்னோவா க்ரீஸ்ட்டா மைலேஜ் லிட்டருக்கு 15.10 கிமீ ஆகும்.
174hp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.8 லிட்டர் என்ஜின் டார்க் 360 Nm ஆகும். இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் இடம் பெற்றிருக்கும். 2.8 லிட்டர் இன்னோவா க்ரீஸ்ட்டா மைலேஜ் லிட்டருக்கு 14.29 கிமீ ஆகும். இந்த என்ஜினில் இக்கோ , நார்மல் மற்றும் பவர் என மூன்றுவிதமான மோடினை பெற்றுள்ளது.
அனைத்து வேரியண்டிலும் 3 காற்றுப்பைகள் (Driver, Front Passenger & Driver Knee) , ஏபிஎஸ் , இபிடி , பிரேக் அசிஸ்ட் மற்றும் ப்ரீ டென்ஸனர் இருக்கை பட்டை போன்றவை நிரந்தர அம்சமாக இனைக்கப்பட்டுள்ளது. மேலும் ZX AT/MT போன்ற வேரியண்டுகளில் 7 காற்றுப்பைகள் ( Driver, Front Passenger, Driver Knee, Front Side, Curtain Shield Airbags ) , வாகனம் நிலைப்புதன்மை , மலையேற உதவி அமைப்பு போன்றவை அமைந்துள்ளது.
டொயோட்டா இன்னோவா க்ரீஸ்ட்டா விலை பட்டியல்
வரிசை | வேரியண்ட் விபரம் | இருக்கை | எக்ஸ்ஷோரூம் விலை |
1 | 2.4 G MT | 7 | 14,13,195 |
2 | 2.4 G MT | 8 | 14,17,695 |
3 | 2.4 GX MT | 7 | 15,06,057 |
4 | 2.4 GX MT | 8 | 15,10,557 |
5 | 2.4 VX MT | 7 | 17,93,084 |
6 | 2.4 VX MT | 8 | 17,97,584 |
7 | 2.4 ZX MT | 7 | 19,87,518 |
இன்னோவா க்ரீஸ்ட்டா ஆட்டோமேட்டிக் விலை விபரம்
வரிசை | வேரியண்ட் விபரம் | இருக்கை | எக்ஸ்ஷோரூம் விலை |
---|---|---|---|
1 | 2.8 GX AT | 7 | 16,36,057 |
2 | 2.8 GX AT | 8 | 16,40,557 |
3 | 2.8 ZX AT | 7 | 21,17,518 |
{ அனைத்தும் சென்னை எக்ஸ்ஷோரூம் விலை பட்டியல் }
தற்பொழுது டெல்லி மற்றும் தலைநகர் பகுதியில் இனோவா விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை.