மிக நீண்ட காத்திருப்புக்கு பிறகு சிம்பிள் எனெர்ஜி நிறுவனத்தின் முதல் மாடலான ஒன் (Simple One) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு ₹ 1.45 லட்சம் முதல் ₹ 1.50 லட்சம் வரை வெளியிடப்பட்டுள்ளது. 212 Km/Charge பயணிக்கும் தொலைவு கொண்டுள்ள மாடலில் 5KWh டூயல் பேட்டரி பேக் உள்ளது.
இந்திய சந்தையில் கிடைக்கின்ற ஏதெர் 450X, ஒலா S1 Pro, பஜாஜ் சேட்டக், ஹீரோ விடா V1 உள்ளிட்ட மாடல்களுடன் பல்வேறு பேட்டரி மின்சார ஸ்கூட்டர்களை எதிர்கொள்ளுகின்றது.
Simple One Electric Scooter
5KWh இரு பிரிவுகளை பெற்ற பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ள 8.5 kW மின்சார மோட்டார் அதிகபட்சமாக 11 bhp பவர் மற்றும் 72 Nm டார்க் வழங்குகின்றது. முழுமையாக சிங்கிள் சார்ஜில் 212 KM பயணிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
0 முதல் 40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 2.77 விநாடிகளும், மற்றும் அதிகபட்ச வேகம் மணிக்கு 105 கிமீ ஆகும்.
இக்கோ மோடில் நிகழ்நேரத்தில் சிம்பிள் ஒன் பேட்டரி மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டர் 150-180Km வரை வழங்ககூடும். ஈக்கோ மோடு எனபது 45 Km/h என வரையறுக்கப்பட்டுள்ளது.
0-40km வேகத்தை எட்டுவதற்கு வெறும் 2.95 விநாடிகளை எடுத்துக் கொள்ளும் எனவும், ஒன் மின்சார ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் 105km/h ஆகும். 90/90-12 அங்குல வீல் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் உடன் கூடுதலாக கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.
ஒன் ஸ்கூட்டருக்கு வழங்கப்பட்டுள்ள சார்ஜரை கொண்டு 0-80 சதவிதம் ஏற 5 மணி நேரம் 54 வீட்டில் உள்ள சார்ஜர் போதுமானதாகும். மேலும் கூடுதலாக ஃபாஸ்ட் சார்ஜர் ஆப்ஷனை செப்டம்பர் 2023 முமல் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் 0-80 % சார்ஜிங் பெற 1.5 கிமீ தூரத்திற்கு 1 நிமிடம் போதுமானதாகும்.
மேலும் சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புளூடூத் மூலம் மொபைலுடன் இணைக்கப்படும் 7-இன்ச் TFT கிளஸ்ட்டரில் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களாக டர்ன் பை டர்ன் நேவிகேஷன், கால் அலர், எஸ்எம்எஸ் அலர்ட் பெற்தாக விளங்குகின்றது. ஓவர் தி ஏர் (OTA) புதுப்பிப்புகள் மூலம் மென்பொருளைப் புதுப்பிக்க முடியும்.
எக்கோ, ரைடு, டாஷ் மற்றும் சோனிக் ஆகிய நான்கு ரைடிங் மோடுகளைக் கொண்டுள்ள ஸ்கூட்டரில் அனைத்து எல்இடி லைட்டிங் மற்றும் பூட் லைட் பெறுகிறது.
சிம்பிள் ஒன் இ-ஸ்கூட்டரில் பிரேசன் பிளாக், நம்ம ரெட், கிரேஸ் ஒயிட் மற்றும் அஸூர் ப்ளூ , அடுத்து டூயல் டோன் பிரேசன் எக்ஸ் மற்றும் லைட் எக்ஸ் ஆகியவற்றுடன் ஆறு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
டூயல் டோன் கொண்ட மாடல் சாதரண ஸ்கூட்டரை விட ரூ.5,000 விலை அதிகமாகும். கூடுதலாக ஸ்கூட்டர் விலையும் 750 வாட்ஸ் சார்ஜர் கட்டணம் ரூ. 13,000 ஆகும்.
ஸ்கூட்டர் மோட்டார் மற்றும் பேட்டரி ஆகியவை மூன்று வருடம் அல்லது 30,000 கிமீ உத்தரவாதத்தம் வழங்கப்பபடுகின்றன. மறுபுறம், சார்ஜர் ஒரு வருடம் அல்லது 10,000 கிமீ வாரண்டியுடன் வருகிறது.
கடந்த 18 மாதங்களாக முன்பதிவு நடைபெற்று வந்த நிலையில், வரும் ஜூன் 6 ஆம் தேதி பெங்களூருவில் டெலிவரி துவங்கப்பட உள்ளது. சிம்பிள் எனெர்ஜி நிறுவனம் அடுத்த 8-10 மாதங்களில் நாடு முழுவதும் 140-150 டீலர்களை நிறுவ திட்டமிட்டுள்ளது.