ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வீடா எலக்ட்ரிக் பிராண்டில் முதல் மாடலான V1 மற்றும் V1 Pro விலை ₹ 25,000 குறைக்கப்பட்டுள்ளளது. எனவே புதிய FAME-II விதிகளின்படி சார்ஜர் இணைக்கப்பட்டுள்ளதால் விலை குறைந்துள்ளது.
சமீபத்தில் பெரும்பாலான எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் தங்கள் மாடல்களின் விலை குறைத்துள்ளனர். ஓலா, ஏதெர் நிறுவனத்தை தொடர்ந்து வீடா நிறுவனமும் இணைந்துள்ளது.
Hero Vida Electric Scooter
வீடா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் வி1 பிளஸ் மின்சார ஸ்கூட்டர் மாடல் 3.44kWh பேட்டரியைப் பெற்று அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 85 கிமீ ரேஞ்ச் வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக, V1 Pro மாடல் சற்று பெரிய 3.94kWh பேட்டரியைப் பெற்றுள்ளது. இதன் ரேஞ்சு 95 கிமீ வரை கிடைக்கும்.
Vida Escooter | Vida V1 Plus | Vida V1 Pro |
---|---|---|
Price | ₹1,19,900 | ₹1,39,900 |
Range | 85 km | 95 km |
அதிகபட்ச வேகம் | 80km/h | 80km/h |
Accelration | 0-40 km/h in 3.4 seconds | 0-40 km/h in 3.2 seconds |
சார்ஜிங் நேரம் | 0-80% charge in 65 minutes | 0-80% charge in 65 minutes |
பேட்டரி திறன் | 3.44kWh battery | 3.94 kWh battery |
விடா வி1 பிளஸ் விலை இப்போது ₹.1,19,900 மற்றும் மற்றும் விடா வி1 ப்ரோவின் விலை ₹ 1,39,900 ஆகும். (இந்தியாவின் எக்ஸ்-ஷோரூம் விலை, போர்ட்டபிள் சார்ஜர் மற்றும் FAME-2 மானியம் உட்பட)
விலை குறைப்பு மட்டுமல்லாமல், விடா இந்த ஆண்டின் இறுதிக்குள் 100 நகரங்களுக்கு விரிவுபடுத்தும் திட்டத்தையும் அறிவித்துள்ளது. தற்போது, டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் பெங்களூருவில் கிடைக்கும் நிலையில், மேலும் சென்னை, புனே, அகமதாபாத், நாக்பூர், நாசிக், ஹைதராபாத், காலிகட் மற்றும் கொச்சி ஆகிய இடங்களுக்கு விற்பனையை தொடங்கியுள்ளன.