வருகின்ற மே முதல் வாரத்தில் புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா க்ரீஸ்ட்டா விற்பனைக்கு வரவுள்ள நிலையில் புதிய இன்னோவா எம்பிவி காரில் இரண்டு விதமான டீசல் என்ஜின் உறுதியாகியுள்ளது.
இன்னோவா க்ரீஸ்ட்டா டீசல் காரில் 2.4 லிட்டர் மற்றும் 2.8 லிட்டர் ஜிடி வகை இஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் பெட்ரோல் இஞ்ஜின் ஆப்ஷனில் 2.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.
GX , GX AT , VX மற்றும் ZX AT போன்ற வேரியண்டில் வரவுள்ள புதிய மாடலில் பேஸ் GX மற்றும் டாப் ZX வேரியண்டில் மட்டுமே ஆட்டோமேட்டிக் உள்ளது.
149 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 2.4லிட்டர் என்ஜின் டார்க் 343 Nm ஆகும். 174 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 2.8 லிட்டர் என்ஜின் டார்க் 360 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் இடம் பெற்றிருக்கும்.
ZX டாப் வேரியண்ட் கேப்டன் இருக்கைகளை மட்டுமே பெற்றிருக்கும் என்பதனால் இதில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது பிரிமியம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும்.
வருகின்ற மே 3ந் தேதி புதிய டொயோட்டா இன்னோவா க்ரீஸ்ட்டா விற்பனைக்கு வரலாம். இதன் ஆன்ரோடு விலை ரூ.18 லட்சம் முதல் ரூ.25 லட்சத்திற்குள் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உதவி ; teambhp