கேடிஎம் நிறுவனத்தின் அனைத்து பைக் மாடல்களும் OBD2 பெற்றதாக விற்பனைக்கு வெளியாகியுள்ளது. ரூ. 850 முதல் ரூ.3,010 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. மற்றபடி வேறு எவ்விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை.
இந்திய சந்தையில் கேடிஎம் 125 டியூக், 200 டியூக், 250 டியூக், 390 டியூக், ஃபேரிங் ஸ்டைலை பெற்ற கேடிஎம் RC 125, RC 200 மற்றும் RC 390 போன்ற மாடல்களுடன் அட்வென்ச்சர் ஸ்டைல் பெற்ற கேடிஎம் 250 அட்வென்ச்சர், 390 அட்வென்ச்சர் என மொத்தமாக 9 மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.
2023 கேடிஎம் பைக்குகள்
கேடிஎம் 125 டியூக் மற்றும் கேடிஎம் RC 125 என இரு மாடல்களும் பொதுவாக 124.7cc, சிங்கிள்-சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் இந்த மோட்டார் அதிகபட்சமாக குதிரைத்திறன் 9,250Rpm-ல் 14.3 bhp, 8,000Rpm-ல் 12 Nm டார்க் வழங்குகின்றது. இதில் ஆறு வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
கேடிஎம் 200 டியூக் மற்றும் கேடிஎம் RC 200 இரு பைக்குகளிலும் பொதுவாக 199.5cc, லிக்விட்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 24.67 bhp பவர் மற்றும் 19.3 Nm டார்க் வழங்குகின்றது. இதில் கிளட்ச் அசிஸ்ட் உடன் இணைந்து ஆறு வேக கியர்பாக்ஸ் உள்ளது.
கேடிஎம் 250 டியூக் மற்றும் கேடிஎம் 250 அட்வென்ச்சர் இரு பைக்குகளிலும் பொதுவாக 248.76cc, லிக்விட்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 30 bhp பவர் மற்றும் 24 Nm டார்க் வழங்குகின்றது. இதில் கிளட்ச் அசிஸ்ட் உடன் இணைந்து ஆறு வேக கியர்பாக்ஸ் உள்ளது.
கேடிஎம் 390 அட்வென்ச்சர், கேடிஎம் 390 டியூக் மற்றும் கேடிஎம் RC 390 என மூன்று மாடல்களிலும் 73.2cc லிக்யூடு-கூல்டு ஒற்றை சிலிண்டர் என்ஜின் கொடுக்கப்பட்டு 43.5 hp குதிரைத்திறன் மற்றும் 37 Nm டார்க் வழங்குகின்றது. இந்த என்ஜினில் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் வந்துள்ளது
KTM Bikes | புதிய விலை | உயர்வு |
KTM 125 Duke | ₹ 1,78,892 | ₹ 851 |
KTM 390 Duke | ₹ 2,97,475 | ₹ 1,245 |
KTM 250 Duke | ₹ 2,38,221 | ₹ 999 |
KTM 200 Duke | ₹ 1,92,845 | ₹ 1,152 |
KTM 390 Adventure | ₹ 3,38,746 | ₹ 1,703 |
KTM 250 Adventure | ₹ 2, 46,651 | ₹ 2,446 |
KTM RC 390 | ₹ 3,18,173 | ₹ 2,103 |
KTM RC 125 | ₹ 1,89,542 | ₹ 902 |
KTM RC 200 | ₹ 2,17,696 | ₹ 3,008 |
KTM 390 Adventure X | ₹ 2,80,000 | – |
(அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை)