இந்தியாவில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள BS6 மாசு உமிழ்வின் 2 ஆம் கட்ட மேம்பாடுகளால் 17 கார்கள் இந்திய சந்தையிலிருந்து முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. RDE மற்றும் E20 எரிபொருள் பயன்படுத்துவதற்கான மாற்றங்களை புதிய வாகனங்கள் பெற்று வருகின்றன.
டீசல் என்ஜின் பெற்ற கார்களின் எண்ணிக்கை பரவலாக குறைந்த வந்த நிலையில், தற்பொழுது சிறிய ரக பெட்ரோல் என்ஜின்களும் விடை பெற துவங்கியுள்ளது. குறிப்பாக மாருதி மற்றும் ரெனால்ட் நிறுவனங்கள் மட்டும் 800cc பெட்ரோல் என்ஜின் பெற்ற கார்களை விற்பனை செய்து வந்த நிலையில் புதிய RDE விதிமுறைகளை பின்பற்ற கூடுதல் செலவுகளை கட்டுப்படுத்த இயலாத காரணத்தால் நீக்கப்படுகின்றன.
17 கார்கள் பட்டியல்
மாருதி சுசூகி ஆல்ட்டோ 800, ரெனால்ட் க்விட் 800, மஹிந்திரா KUV100, ஹோண்டா ஜாஸ், ஹூண்டாய் i20 டீசல், ஹோண்டா அமேஸ் டீசல், ஹோண்டா WR-V, ஹோண்டா சிட்டி 4வது தலைமுறை, நிசான் கிக்ஸ், ஹூண்டாய் வெர்னா டீசல், ஹோண்டா சிட்டி டீசல், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா பெட்ரோல், ஸ்கோடா ஆக்டாவியா, மஹிந்திரா மராஸ்ஸோ, மஹிந்திரா அல்டூராஸ் G4, டாடா அல்ட்ராஸ் டீசல் மற்றும் ஸ்கோடா சூப்பர்ப்
இவற்றில் ஒரு சில கார்கள் பெட்ரோல் என்ஜினில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட உள்ளது. மற்றபடி ஒரு சில கார்கள் முற்றிலும் மேம்பட்ட புதிய பிளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
ஆனால், திரும் வாங்கவே இயலாத கார்களில் மாருதி ஆல்ட்டோ 800 மற்றும் க்விட் 800 உட்பட பல்வேறு டீசல் என்ஜின் பெற்ற சிறிய கார்கள் இனி கிடைக்காது.
RDE பற்றி வீடியோ..,