பிரசத்தி பெற்ற ஸ்போர்டிவ் பைக்குகளான யமஹா R15 V4 மற்றும் R15S என இரண்டு மாடல்களிலும் சிறிய அளவிலான மாற்றங்களை பெற்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர குறைந்த விலை எம்டி-15 பைக் மற்றும் ஏரோக்ஸ் 155cc ஸ்கூட்டரையும் வெளியிட்டுள்ளது.
2023 யமஹா R15 V4
R15 V4 பைக்கில் புதிய வெள்ளை நிறம் சேர்க்கப்பட்டு கூடுதலாக க்விக் ஷிஃப்டரை பெறுகின்றது. மற்றபடி தொடர்ந்து எந்த மாற்றமும் இல்லை. ஆனால் S வேரியண்டில் இந்த வசதி சேர்க்கப்படவில்லை.
அடுத்து, R15S வேரியண்டில் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இரு மாடல்களும் OBD2 மற்றும் E20 ஆதரவுக்கு ஏற்ற 155சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு-கூல்டு VVA என்ஜின் அதிகபட்சமாக 18.1bhp பவரை 10,000 rpm-லும் மற்றும் 7500 rpm-ல் 14.2Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
2023 யமஹா R15S விலை ₹ 1,64,939
2023 யமஹா R15 V4 விலை ₹ 1,82,439 – ₹ 1,87,439
(எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு)