பிரசத்தி பெற்ற சுஸூகி ஜிக்ஸெர் பைக்கில் பின்புற டயரில் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்ட மாடல் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் பார்வைக்கு வந்தது. வரும் ஏப்ரல் 15ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
150சிசி முதல் 160சிசி வரையிலான பிரிவில் சிறப்பான வரவேற்பினை பெற்ற மோட்டார்சைக்கிளாக வலம் வரும் ஜிக்ஸெர் 150 பைக்கில் 13.94 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 155சிசி இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 14 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் பின்புற டயரில் டிஸ்க் பிரேக் மட்டுமே பெற்றுள்ளது. கூடுதலாக கருப்பு – பச்சை வண்ண கலவையில் புதிய வண்ணம் இணைக்கப்பட்டுள்ளது. ஜிக்ஸெர் மாடலில் ஃபுல் ஃபேரிங் செய்யப்பட்ட மாடலாக சுஸூகி ஜிக்ஸெர் SF விற்பனையில் உள்ளது. வருகின்ற 15ந் தேதி அதிகார்வப்பூர்வமாக சுசூகி ஜிக்ஸெர் ரியர் டிஸ்க் பிரேக் விற்பனைக்கு வரவுள்ளது.
மேலும் படிங்க ; சுசூகி ஜிக்ஸெர் 250 வருகையா ?