மஹிந்திரா இருசக்கர பிரிவில் சிறப்பான வரவேற்பினை பெற தொடங்கியுள்ள நிலையில் புதிய மஹிந்திரா 150சிசி என்ஜின் பொருத்தப்பட்ட கம்யூட்டர் பைக்கினை சோதனை ஓட்டத்தில் களமிறக்கியுள்ளது.
அட்வென்ச்சர் டூரிங் ரக மோஜோ பைக்கின் தொடர்ந்து 150சிசி பிரிவில் வரவுள்ள இந்த மாடல் கிளாசிக் தோற்ற அமைப்பில் கவர்ச்சியான தோற்ற பொலிவினை பெற்ற மாடலாக விளங்கும வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
150சிசி முதல் 160சிசி வரையிலான பைக்குளுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் சிறப்பான ஆற்றலுடன் கூடிய செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய 155சிசி என்ஜின் பெற்றிருக்கலாம். இதன் ஆற்றல் 15hp இருக்கும் என தெரிகின்றது.
2008 ஆம் ஆண்டில் கைனெடிக் பைக் நிறுவனத்தினை கைப்பற்றிய மஹிந்திரா களமிறக்கிய பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. விதிவிலக்காக கஸ்ட்டோ ஸ்கூட்டர் நல்ல வரவேற்பினை பெற்றது. செஞ்சூரோ பைக் ஒரளவு வரவேற்பினை பெற்றது.
மேலும் வாசிங்க ; தமிழகத்தில் மஹிந்திரா மோஜோ பைக் விலை
தொடக்க நிலை அட்வென்ச்சர் ஸ்போர்ட்டிவ்டூரிங் மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட மோஜோ அபரிதமான வரவேற்பினை பெற்று விளங்குகின்றது. மிக கடுமையான போட்டி நிறைந்த 150சிசி முதல் 160சிசி வரையிலான பிரிவில் சிறப்பான மாடலாக நிலை நிறுத்தப்பட உள்ளது.
படங்கள் உதவி ; car and bike