டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் யூஎம் ரெனிகேட் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. நாடு முழுதும் 25 டீலர்களை நியமித்துள்ள யூஎம் இதுவரை 1000 முன்பதிவுகளை பெற்றுள்ளது. ஜூன் மத்தியில் டெலிவரி தொடங்க உள்ளது.
ரெனிகேட் மோட்டார்சைக்கிள் வரிசைகளில் 25 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 279சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 27.8 Nm ஆகும். இதில் 6 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது.
ரெனிகேட் கிளாசிக் , ரெனிகேட் கமாண்டோ , ரெனிகேட் ஸ்போர்ட் S போன்ற மாடல்கள் தோற்ற வித்தியாசத்தை மட்டுமே பெற்றுள்ள நிலையில் என்ஜின் செயல்திறன் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்கள் போன்றவற்றில் மூன்று பைக்குகளிலும் ஒன்றாகும்.
யூஎம் மோட்டார்சைக்கிள் விலை பட்டியல்
- ரெனிகேட் கிளாசிக் – ரூ. 1.69 லட்சம்
- ரெனிகேட் கமாண்டோ – ரூ.1.59 லட்சம்
- ரெனிகேட் ஸ்போர்ட் எஸ் – ரூ. 1.49 லட்சம்
தமிழகத்தில் சென்னை , கோவை மற்றும் மதுரை என மூன்று நகரங்களில் தன் சேவை மையங்களை தொடங்க உள்ளது. ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு போட்டியாக அமைந்துள்ள ரெனிகேட் பைக்குகள் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது.