2021 ஜனவரி முதல் ரெனால்ட் இந்தியா தனது கார்களின் விலையை அதிகபட்சமாக ரூ.28,000 வரை உயர்த்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம் க்விட், ட்ரைபர் மற்றும் டஸ்ட்டர் ஆகிய மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.
கோவிட்-19 தொற்றுநோய்களின் போது எஃகு, அலுமினியம், பிளாஸ்டிக் மற்றும் பிற உதிரிபாகங்களின் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட செலவுகள் படிப்படியாக அதிகரித்து வருவதன் காரணமாக விலைகள் உயர்த்துவது கட்டாயமாகிறது, என தனது அறிக்கையில் ரெனால்ட் இந்தியா தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மாடல்களின் வேரியண்ட் வாரியாக உயர்த்தப்படுகின்ற விலையை தற்போது ரெனோ அறிவிக்கவில்லை. நாட்டில் பெரும்பாலான மோட்டார் வாகன தயாரிப்பளார்கள் தங்களது மாடல்களின் விலையை கணிசமாக ஜனவரி முதல் உயர்த்த உள்ளது.
சமீபத்தில் ரெனால்ட் அறிமுகம் செய்த கிகர் கான்செப்ட் எஸ்யூவி காரின் உற்பத்தி நிலை மாடல் ஜனவரி 2021 விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.