அடுத்த சில நாட்களுக்குள் விற்பனைக்கு வரவுள்ள புதிய ஏப்ரிலியா SXR 160 ஸ்கூட்டருக்கு ரூ.5000 முன்பதிவு கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. விலை அறிவிக்கப்படாத நிலையில் அனேகமாக ரூ.1.29 (எக்ஸ்ஷோரூம்) லட்சத்திற்குள் அமையலாம்.
முழு எல்இடி விளக்குகள், உயர்த்தப்பட்ட கைப்பிடி, யூ.எஸ்.பி சார்ஜிங் போர்ட், முழு டிஜிட்டல் கிளஸ்ட்டர் கன்சோல், டிஸ்க் பிரேக் உடன் ஏபிஎஸ், 5 ஸ்போக்குகளை பெற்ற 12 அங்குல அலாய் வீல் பெற்றிருக்கும். சிவப்பு, நீலம், வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய ஆறு விதமான நிறங்களில் இந்த ஸ்கூட்டர் கிடைக்கும்.
160 சிசி என்ஜினை பெற உள்ள எஸ்.எக்ஸ்.ஆர் 160 ஸ்கூட்டரில் மிக சிறப்பான பிரேக்கிங் செயல்திறனை பெற்ற டிஸ்க் பிரேக்குடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டிருக்கும்.
இந்தத்தருணத்தில் பேசிய பியாஜியோ இந்தியாவின் தலைவரும் நிர்வாக
இயக்குநருமான திரு. டியாகோ கிராஃபி கூறியது, எங்கள் பிரீமியம்
ஸ்கூட்டரான ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160, உற்பத்தி வரிசையில் இருந்து
வெளிவர துவங்கியுள்ளது எங்களுக்கு ஒரு மிகப்பெரிய உணர்வாக
உள்ளது, 2020 சவால்கள் நிறைந்த ஆண்டாக இருந்தது, ஆனால் மிகவும்
எதிர்பார்க்கப்பட்ட ஸ்கூட்டரை விரைவாக வழங்குவதற்கான எங்கள்
வாக்குறுதியை நிறைவேற்ற நாங்கள் உறுதியாக இருந்தோம்.எங்கள்
புகழ்பெற்ற வாடிக்கையாளர்களுக்காக, எங்கள் இணைய வழி வணிக
இணையதளத்தில் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து
டீலர்ஷிப்களிலும் எஸ்.எக்ஸ்.ஆர்160 முன்பதிவு துவங்குவதாக
அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், ஏப்ரிலியா எஸ்.எக்ஸ்.ஆர்160
அதன் தனித்துவமான அடுத்த தலைமுறை வடிவமைப்பு மற்றும்
தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட அம்சங்களுடன், ஏப்ரிலியாவைப்
பின்பற்றுபவர்களுக்கு ஒரு புதிய நித்திய அனுபவத்தை உருவாக்கும்
என்று நாங்கள் நம்புகிறோம்.
ஏப்ரிலியா எஸ்.எக்ஸ்.ஆர்160 மிகவும் கவர்ச்சிகரமான க்ளோஸி ரெட், மாட்
ப்ளூ, க்ளோஸி வைட் மற்றும் மாட் பிளாக் நிறங்களில் கிடைக்கின்றது.
booking – aprilia sxr 160