ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் முதல் மாடலான 450 வெற்றியை தொடர்ந்து வெளியான 450X மின்சார ஸ்கூட்டர் சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களை தொடர்ந்து 27 நகரங்களில் 2021 மார்ச் மாத இறுதிக்குள் விரவுப்படுத்த திட்டமிட்டுள்ளது.
கூடுதலாக இணைக்கப்பட உள்ள 16 நகரங்களின் பட்டியல் பின் வருமாறு :- மைசூர், ஹுப்ளி, ஜெய்பூர், இந்தூர், பனாஜி, புவனேஸ்வர், நாஷிக், சூரத், சண்டிகர், விஜயவாடா, விசாகப்பட்டினம், கவுகாத்தி, நாக்பூர், நொய்டா, லக்னோ மற்றும் சிலிகுரி ஆகியவற்றில் துவங்கப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கூடுதலாக கோவை மாநகரத்தில் கிடைக்க உள்ளது.
நாடு முழுவதும் 450 எக்ஸ் மின் ஸ்கூட்டருக்கு அமோகமான வரவேற்ப்பு கிடைத்து வரும் நிலையில், முன்பாக வெளியிடப்பட்ட லிமிடெட் எடிஷன் சீரிஸ்-1 இந்த நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் ஜனவரி 2020-ல் பதிவு செய்திருந்தால் கிடைக்கும் என ஏத்தர் உறுதிப்படுத்தியுள்ளது.
ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டர் சிறப்புகள்
6 கிலோ வாட் எலெக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 26 என்எம் டார்க் வெளிப்படுத்தும். 108 கிலோ கிராம் எடை கொண்ட 450 எக்ஸ் ஸ்கூட்டரில் 0- 40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.29 விநாடிகளும், 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 6.50 விநாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்கின்றது. விற்பனையில் கிடைக்கின்ற 125சிசி பெட்ரோல் ஸ்கூட்டரை விட மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்துகின்றது.
450X ஸ்கூட்டரில் உள்ள பெரிய லித்தியம் அயன் பேட்டரி சார்ஜ் செய்ய இப்போது 3 மணிநேரம் 35 நிமிடங்கள் 80 சதவிகிதத்தையும் அதுவே, 5 மணிநேர 45 நிமிடங்களையும் பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவிகிதம் பெறுவதற்கு தேவைப்படுகின்றது.
450எக்ஸ் ஸ்கூட்டரில் ஈக்கோ மோட், ரைட் மோட், ரேப் மோட் மற்றும் ரிவர்ஸ் மோட் ஆகியவற்றை கொண்டுள்ளது.
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள தொடுதிரை கிளஸ்ட்டரை ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி தொடர்பினை கொண்டுள்ளது. கூடுதலாக 4ஜி இ-சிம் கார்டு ஆப்ஷனை பெறகின்றது.
116 கிமீ ரேஞ்சு வழங்கும் என சான்றிதழ் வழங்கப்பட்டாலும் உண்மையான ரேஞ்சு 85 கிமீ என உறுதிப்படுத்துவதாக அதிகாரப்பூர்வமாக ஏதெர் குறிப்பிட்டுள்ளது