வரவிருக்கும் புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் காரின் சோதனை ஓட்ட படங்கள் முதன்முறையாக இணையத்தில் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் சுஸூகி ஸ்விஃப்ட் காரின் தோற்ற படங்கள் வெளியாகியிருந்தது.
மேம்படுத்தப்பட்ட மாருதி ஸ்விஃப்ட் கார் அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர மாருதி சுஸூகி திட்டமிட்டுள்ளது. புரோட்டோடைப் மாடல் தற்பொழுது சோதனை ஓட்டத்தில் உள்ளது.
முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் தோற்றத்தினை வெளிப்படுத்தியுள்ள மாருதி ஸ்விஃப்ட் காரின் தோற்றம் கவர்ந்திழுக்கும் வகையில் தன்னுடைய பாரம்பரியத்தினை இழக்காமல் உள்ளதாக தெரிகின்றது.
முகப்பு கிரில் முற்றிலும் மாறுபட்ட நிலையில் உள்ளது. முகப்பு விளக்கு முந்தைய மாடலை தழுவியிருந்தாலும் தட்டையாக இருக்கின்றது. இதனை பக்கவாட்டில் கைப்பிடிகள் , பின்புற கதவு கைப்பிடிகள் சி பில்லரின் மேற்பக்கத்தில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க ; மாருதி ஸ்விஃப்ட் கார் விபரம்
பின்புறத்தில் நேர்த்தியான அமைப்பினை கொண்ட எல்இடி டெயில் விளக்குகள் , ரீடிசைன் செய்யப்பட்ட பம்பர் , மேற்கூறை முந்தைய மாடலை போலேவே மிதக்கும் வகையில் சரிவாக உள்ளது.
உட்புறத்தில் புதிய இரட்டை வண்ண டேஸ்போர்டின் சென்ட்ரல் கன்சோலில் அகலமான தொடுதிரை அமைப்பு இடம்பெற வாய்ப்புள்ளது. என்ஜின் ஆப்ஷனில் 1.0 லிட்டர் டர்போபூஸ்ட் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் வரலாம்.
விற்பனையில் உள்ள மாடலை விட முற்றிலும் மாறுபட்ட தளத்தில் சிறப்பான பல வசதிகளுடன் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் வாடிக்கையாளர்கள் தேவையை பூர்த்தி செய்யும் மாடலாக வரவுள்ளது.
சோதனை படங்கள் ; carscoops.com