இந்திய சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்ரோ ஸ்டைல் ஹைனெஸ் சிபி 350 பைக்கின் அடிப்படையிலான ஸ்கிராம்பளர் பைக்கினை ஹோண்டா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது.
ரெட்ரோ ஸ்டைல் பெற்ற பைக்குகளுக்கு சவாலாக வெளியான ஹைனெஸ் சிபி 350 அடிப்படையில் ஸ்கிராம்பளர் மற்றும் கஃபே ரேசர் பைக்குகளை உருவாக்குவது மிகவும் சாத்தியமான ஒன்றே ஆகும்.
பொதுவாக தற்போது இடம்பெற்றுள்ள இன்ஜின் பொருத்தப்பட்டு, ஸ்கிராம்பளர் மாடலுக்கு உரித்தான வயர் ஸ்போக்டூ வீல்ஸ், நீண்ட தொலைவு பயணிக்கும் சஸ்பென்ஷன், பேட்டரன் டயர் பெற்றதாகவும் இந்த பைக்குகளுக்கு உரித்தான முறையில் புகைப்போக்கி மேலே கொடுக்கப்பட்டிருக்கும்.
முன்பே ஹோண்டா இந்தியாவில் அறிவித்தபடி பல்வேறு புதிய பரீமியம் மாடல்களை கொண்டு வருவதுடன் நாடு முழுவதும் பிக் விங் டீலர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. எனவே, அடுத்த ஆண்டின் மத்தியில் ஸ்கிராம்பளர் அல்லது கஃபே ரேசர் ஸ்டைலிலான பைக்கினை எதிர்பார்க்கலாம்.
உதவி – https://young-machine.com/