பஜாஜ் ஆட்டோ வி15 மோட்டார்சைக்கிள் விலையை வெளியிட்டுள்ளது. பஜாஜ் வி15 பைக் விலை ரூ. 63,682 (எக்ஸ்ஷோரூம் சென்னை ) ஆகும். V15 பைக் வரும் மார்ச் மாத மத்தியில் டெலிவரி செய்ய உள்ளது.
தற்பொழுது முன்பதிவு நடந்து வரும் நிலையில் முக்கிய நகரங்களின் விலை பட்டியல் வெளியாகியுள்ளது. பஜாஜ் V15 பைக்கில் 150சிசி என்ஜின் பொருத்தப்பட்ட் கம்நூட்டர் ரக பைக்குகளுக்கு போட்டியாக 150சிசி பிரிவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 1ந் தேதி அறிமுகம் செய்யப்பட்ட பஜாஜ் வி15 பைக்கில் 1971ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போரில் முக்கிய பங்காற்றிய ஐஎன்எஸ் விக்ராந்த் விமான தாங்கி போர்க்கப்பல் 2014 ஆம் ஆண்டில் உடைக்கப்பட்டது. அந்த மெட்டலை கொண்டு பஜாஜ் V15 மோட்டார்சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது.
மொத்த மோட்டார்சைக்கிளும் ஐஎன்எஸ் விக்ராந்த் மெட்டல் பாகத்தால் உருவாக்கப்படவில்லை. அதாவது எரிபொருள் கலன் மட்டுமே இந்த மெட்டலை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 12 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 150சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைவிசை 13 Nm ஆகும்.
பஜாஜ் வி15 பைக் விலை
- சென்னை – ரூ. 63,682
- டெல்லி – ரூ. 61,999
- மும்பை – ரூ. 62,820
- கோல்கத்தா – ரூ. 65,495
{ அனைத்தும் எக்ஸ்ஷோரூம் விலை }
மேலும் படிக்க ; பஜாஜ் வி15 பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
[envira-gallery id=”5741″]