டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் டிவிஎஸ்எம் ( TVSM Mobile app ) என்ற பெயரில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான ஸ்மார்ட் மொபைல் அப்ளிகேஷனை அறிமுகம் செய்துள்ளது. டிவிஎஸ் வாடிக்கையாளர்கள் TVSM ஆப் மூலம் பல தகவல்களை பெற இயலும்.
வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிவிஎஸ்எம் ஆப்ளிகேஷன் வாயிலாக பல தகவல்கள் மற்றும் நிறைவான சேவை வழங்க டிவிஎஸ் திட்டமிட்டுள்ளது.
டிவிஎஸ்எம் (TVSM) சிறப்புகள் :
சர்வீஸ் காலஇடைவெளி – சர்வீஸ் நினைவுகூர்தல்
சர்வீஸ் முன்பதிவு – நாடு முழுதும் உள்ள 120 டீலர்கள் வாயிலாக முதற்கட்டமாக ஆன்லைன் சர்வீஸ் முன்பதிவு வசதியை பெற இயலும்.
சர்வீஸ் வரலாறு – உங்கள் இருசக்கர வாகனத்தின் சர்வீஸ் வரலாற்றை அறிய இயலும்.
வாரண்டி – வாகனத்தின் வாரண்டி விபரங்கள்
டீலர் இருப்பிடம் – டீலர் உள்ள இடங்களை மேப் வாயிலாக தெரிந்து கொள்ள இயலும்.
டிப்ஸ் – மைலேஜ் குறிப்புகள் , வாகன பராமரிப்பு குறிப்புகள்
செய்திகள் – புதிய செய்திகள் மற்றும் முக்கிய தகவல்கள்
எரிபொருள் செலவு – எரிபொருள் நிரப்ப எவ்வளவு செலவு செய்கின்றோம் என்பதனை அறிய மிக எளிமையான கால்குலேட்டரை பெற்றுள்ளது.
நுட்பவிபரங்கள் – டிவிஎஸ் நிறுவன இருசக்கர வாகனங்களின் தொழிநுட்ப விபரங்கள்.
இந்த மொபைல் அப்ளிகேஷனை தரவிறக்க ; கூகுள் பிளே டிவிஎஸ்எம்