டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா e2o எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் மாடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. e2o எலக்ட்ரிக் காரை அடிபைபடையாக கொண்ட ஸ்போர்ட்டிவ் மாடலாகும்.
2013 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வந்த இரு கதவுகளை கொண்ட ஹேட்ச்பேக் எலக்ட்ரிக் மாடலின் தோற்றத்தில் ஸ்போர்ட்டிவ் கிட் பாடி அம்சங்களை இணைத்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. முன்பக்க பம்பர் லிப் , பாடி கிளாடிங் , ரியர் ஸ்பாய்லர் போன்னவற்றுடன் கூடுதலாக ரேசிங் ஸ்டிக்கரிங் செய்யப்பட்டுள்ள இ2ஓ காரில் கருப்பு நிற மேற்கூறை , அலாய் வீல் , கைப்பிடி , ரியர் வியூ மிரர் போன்றவற்றை பெற்றுள்ளது.
மேலும் உட்புறத்தில் ஸ்போர்ட்டிவ் பக்கெட் இருக்கைகள் , மோமோ ஸ்டீயரிங் வீல் போன்றவற்றை கொண்டுள்ளது.
85KW மின்சார மோட்டார் 105KW ஆற்றல் மற்றும் 180NM டார்க்கினை வெளிப்படுத்தும். 0 முதல் 60 கிமீ வேகத்தினை 4 விநாடிகளிலும் 0 முதல் 100 கிமீ வேகத்தை 8 வநாடிகளிலும் எட்டும் . இதன் உச்சவேகம் மணிக்கு 120 கிமீ ஆகும். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 200கிமீ வரை பயணிக்க இயலும். இதில் 384V ஸ்டீல் ஷெல் லித்தியம் ஐன் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும்.
தற்பொழுது பார்வைநிலை மாடலாக வந்துள்ள மஹிந்திரா e2o ஸ்போர்ட்ஸ் மாடல் எலக்ட்ரிக் கார்களின் தேவை அதிகரிக்கும் பொழுது பெர்ஃபாமென்ஸ் ரக எலக்ட்ரிக் மாடலாக நிலைநிறுத்தப்பட உள்ளது.
[envira-gallery id="7119"]