இந்திய சந்தையில் பிரபலமான கார்களில் ஒன்றாக விளங்குகின்ற மாருதி சுசூக்கி நிறுவனத்தின் பலேனோ ஹேட்ச்பேக் காரின் 2022 ஆம் ஆண்டிற்கான புதிய மாடலின் படங்கள் முதன்முறையாக இணையத்தில் கசிந்துள்ளது.
சமீபத்தில் மாருதி செலிரியோ காரின் இரண்டாம் தலைமுறை பல்வேறு மாற்றங்களுடன் கூடுதல் வசதிகளை பெற்று இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் முதன்மையான காராக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த மாடல் பலேனோ வெளியிடுவது உறுதியாகியுள்ளது.
2022 பலேனோ கார்
சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வரும் சுசூக்கி பலேனோ காரில் தொடர்ந்து என்ஜினில் எந்த மாற்றமும் இல்லாமல் 82 bhp பவரை வழங்கும் 1.2-லிட்டர் VVT என்ஜினில் 5 வேக மேனுவல், ஆட்டோமேட்டிக் சிவிடி கியர்பாக்ஸ் மற்றும் 1.2-லிட்டர் டூயல் ஜெட், டூயல் VVT ஸ்மார்ட் ஹைபிரிட் என்ஜின் 89 hp குதிரைத்திறன் வெளிப்படுத்துவதுடன் 113 Nm டார்க் வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.
தோற்ற அமைப்பில் விற்பனையில் உள்ள பலேனோ காரை விட மாறுபட்ட பம்பர், கிரில் அமைப்பு பெற்றுள்ள காரில் புராஜெக்டர் ஹெட்லேம்ப் உடன் எல்இடி ரன்னிங் விளக்கினை பெற்றுள்ளது. அடுத்தப்படியாக பனிவிளக்குகள், ஓஆர்விஎம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
பக்கவாட்டில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமல் பின்புறத்தில் டெயில் விளக்கு மாற்றப்பட்டு, பம்பரில் சிறிய அளவிலான மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளது.
இன்டிரியர் அமைப்பினை பொறுத்தவரை எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 கார்களில் உள்ளதை போன்றே கொடுக்கப்பட்டுள்ள டேஸ்போர்டினை பெறுவதுடன் ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ சிஸ்டத்தை பெற்று ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே பெற்றிருக்கும்.
image source- instagram/motorbeam