புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாருதி சுசூகி நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை செலிரியோ காரின் அறிமுக ஆரம்ப விலை ரூ.4.99 லட்சம் முதல் ரூ.6.94 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தின் தொடக்கத்திலிருந்து ரூ.11,000 கட்டணமாக வசூலிக்கப்பட்டு முன்பதிவு நடைபெற்று வருகின்றது. முந்தைய மாடலை விட சற்று கூடுதலான விலையில் வெளியிடப்பட்டுள்ள செலிரியோ மிக சிறப்பான வசதிகளுடன், இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் காராக விளங்குகின்றது.
மாருதி செலிரியோ
புதிய தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோ முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் ஸ்டைலை பெற்று 3D ஆர்கானிக் முறையிலான வடிவமைப்பு கொண்டுள்ளது. உயர்த்தப்பட்ட ஹூட் மற்றும் ஒற்றை குரோம் ஸ்லேட்டுடன் புதிய கிரில்லுடன் சற்று உயரமான காராக விளங்குகின்றமு.
இந்த கார் புதிய ஸ்வீப் பேக் ஹெட்லேம்ப்கள் மற்றும் பிளாக் கிளாடிங் மற்றும் புதிய ஃபோக்லேம்ப்களுடன் கூடிய முன்பக்க பம்பருடன் வருகிறது. செலிரியோவில் டர்ன் சிக்னல் விளக்குகள், மற்றும் புதிய 15-இன்ச் அர்பேன் பிளாக் அலாய் வீல்களுடன் புதிய பாடி கலர் ORVM, பின்புறத்தில், கார் புதிய டெயில்லைட்கள், பின்புற கண்ணாடி வைப்பர் மற்றும் பிரதிபலிப்பான் ஆகியவற்றுடன் வருகிறது.
1.0-லிட்டர், 3-சிலிண்டர், K10C டூயல் ஜெட் மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 67 HP மற்றும் 94 Nm டார்க்கை வழங்குகின்றது. முன் சக்கர டிரைவ் பெற்றுள்ள இந்த மாடலில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5-ஸ்பீடு AMT வழங்கப்படும்.
புதிய செலிரியோ காரின் ARAI சான்றளிக்கப்பட்ட மைலேஜ் 26.68 kmpl வழங்குகிறது.
செலிரியோ இன்டிரியர்
தற்போது விற்பனையில் உள்ள காரை விட மாறுபட்ட இன்டிரியரை பெற்றுள்ள செலிரியோ காரில் கருமை நிறத்திலான லேஅவுட்டில் அலுமினியத்தில் தயாரிக்கப்பட்ட அசென்ட்ஸ் இணைக்கப்பட்டு மிதிக்கும் தோற்றத்தை வெளிப்படுத்துகின்ற தொடுதிரை கன்சோல் பெற்றுள்ளது. ஸ்டீயரிங் வீலில் கட்டுப்பாடுகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட இன்ஸ்டூருமென்ட் கிளஸ்டர் கொண்டுள்ளது.
முதன்முறையாக 7.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்றுள்ள செலிரியோவில் மாருதியின் ஸ்மார்ட்பிளே ஸ்டுடியோ அமைப்பினை பெற்ற ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆதரவுடன் இயங்குகிறது.
மாருதி சுசூக்கி செலிரியோ விலை பட்டியல்
Maruti Suzuki Celerio | Manual | AGS |
---|---|---|
LXI | ₹ 4.99 lakh | – |
VXI | ₹ 5.63 lakh | ₹ 6.13 lakh |
ZXI | ₹ 5.94 lakh | ₹ 6.44 lakh |
ZXI+ | ₹ 6.44 lakh | ₹ 6.94 lakh |