இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனத்தின் புதிய செலிரியோ ஹேட்ச்பேக் காரின் முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் விற்பனைக்கு 10 நவம்பர், 2021-ல் எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய மாருதி செலிரியோ
1.0-லிட்டர், 3-சிலிண்டர், K10C டூயல் ஜெட் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 68 BHP மற்றும் 94 Nm டார்க்கை வழங்குகின்றது. முன் சக்கர டிரைவ் பெற்றுள்ள இந்த மாடலில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5-ஸ்பீடு AMT வழங்கப்படும்.
செலிரியோ இன்டிரியர்
தற்போது விற்பனையில் உள்ள காரை விட மாறுபட்ட இன்டிரியரை பெற்றுள்ள செலிரியோ காரில் கருமை நிறத்திலான லேஅவுட்டில் அலுமினியத்தில் தயாரிக்கப்பட்ட அசென்ட்ஸ் இணைக்கப்பட்டு மிதிக்கும் தோற்றத்தை வெளிப்படுத்துகின்ற தொடுதிரை கன்சோல் பெற்றுள்ளது. ஸ்டீயரிங் வீலில் கட்டுப்பாடுகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட இன்ஸ்டூருமென்ட் கிளஸ்டர் கொண்டுள்ளது.
முதன்முறையாக 7.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்றுள்ள செலிரியோவில் மாருதியின் ஸ்மார்ட்பிளே ஸ்டுடியோ அமைப்பினை பெற்ற ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆதரவுடன் இயங்குகிறது.
புதிய செலிரியோ ஹேட்ச்பேக்கிற்கான அதிகாரப்பூர்வ முன்பதிவுகளை மாருதி தொடங்கியுள்ளது. முன்பதிவு கட்டணமாக ரூ.11,000 ஆன்லைனில் அல்லது டீலர்ஷிப்கள் மூலம் செலுத்தி பதிவு செய்யலாம்.