இந்தியாவில் வால்வோ நிறுவனம் டீசல் என்ஜினுக்கு மாற்றாக மைல்டு ஹைபிரிட் பெட்ரோல் என்ஜின் பெற்ற S90 செடான் மற்றும் XC60 எஸ்யூவி என இரண்டின் ஃபேஸ்லிஃப்ட் மாடலையும் ரூ.61.90 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.
S90 மற்றும் XC60 என இரு கார்களிலும் பொதுவாக 48V இணைக்கப்பட்ட ஸ்டார்டர் மோட்டாருடன் 250hp பவர், 350Nm டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இரு கார்களிலும் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. எஸ்யூவி ரக எக்ஸ்சி 60 காரில் கூடுதலாக ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் பெற்றதாக அமைந்துள்ளது.
தோற்ற அமைப்பினை பொறுத்தவரை முன்புற பம்பர் புதுப்பிக்கப்பட்டு, கிரில் மாற்றப்பட்டு நேர்த்தியான க்ரோம் ஸ்லாட் எஸ்90 மாடலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 4 விதமான நிறங்களில் கிடைக்கின்றது.
இரு கார்களிலும் உயர் தர பாதுகாப்பு வசதிகளில் குறிப்பாக, அடாப்ட்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் கீப்பிங் ஏய்ட், பைலட் அசிஸ்ட், பிளைன்ட் ஸ்பாட் தகவலுடன் கிராஸ் டிராஃபிக் அலர்ட், மோதலை தடுக்கும் அமைப்பு ஆகியவற்றை பெற்றுள்ளது.
2022 Volvo S90 and XC60 Facelift Price –
Model | Price |
---|---|
Volvo S90 B5 Inscription mild-hybrid | Rs. 61,90,000/- |
Volvo XC60 B5 Inscription mild-hybrid | Rs. 61,90,000/- |