மைக்ரோ எஸ்யூவி சந்தையில் வெளியிடப்பட உள்ள டாடா மோட்டார்ஸ் பஞ்ச் எஸ்யூவி காரில் ஆஃப் ரோடு அனுபவங்களை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள காரின் சிறப்புகள் உட்பட அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
ஒரே ஒரு பெட்ரோல் என்ஜினை மட்டும் பெறுகின்ற பஞ்ச் காரில் பல்வேறு டெக்னாலஜி சார்ந்து அம்சங்களை இணைத்திருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டுகின்றது. குறிப்பாக முதல் தலைமுறை கார் வாங்குபவர்களின் முதல் தேர்வாக அமைவதற்கான அனைத்து அம்சங்களையும் பன்ச் பெற்றுள்ளது.
டாடா பஞ்ச் டிசைன்
ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் காட்சிக்கு வந்த HBX கான்செப்ட் மாடலின் அடிப்படையில் உற்பத்தி நிலைக்கு எடுத்து வரப்பட்டுள்ள பஞ்ச் எஸ்யூவி காரின் முன்புற தோற்ற அமைப்பினை பொறுத்தவரை தனது பிரீமியம் எஸ்யூவி மாடல்களான ஹாரியர், சஃபாரி காரை நினைவுப்படுத்துகின்றது.
முகப்பில் சற்று உயர்ந்த தோற்றத்தை வெளிப்படுத்தும் பானெட் கொடுக்கப்பட்டு இரு பிரிவுகளை பெற்ற ஹெட்லைட் அமைப்பில் புராஜெக்டர் ஹெட்லேம்ப் உடன் எல்இடி ரன்னிங் விளக்கினை கொண்டுள்ளது. டாடா லோகோ வழங்கப்பட்டுள்ள பகுதியில் கருமை நிற கிரில் கொடுக்கப்பட்டு அதிகம் டாடா பயன்படுத்துகின்ற tri-arrow வடிவ கிரில் இணைக்கப்பட்டுள்ளது. பம்பரின் கீழ் பகுதியில் பனி விளக்குகள் tri-arrow வடிவம் பரவலாக சேர்க்கப்பட்டுள்ளது.
பக்கவாட்டில் 16 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல் பெற்று 195/60/16 டயரை கொண்டுள்ள பன்ச்சில் சற்று உயரமான வீல் ஆர்ச், கிளாடிங் பேனல்கள், சி பில்லர் பகுதியில் வழங்கபட்டுள்ள கருப்பு நிற பகுதியில் பின்புற கதவுகளை திறப்பதற்கான கைப்பிடிகள் வழங்கப்பட்டுள்ளது.
3,827 மிமீ நீளம், 1,742 மிமீ அகலம் மற்றும் 2,445 மிமீ வீல்பேஸ் கொண்டுள்ள பஞ்சின் உயரம் 1,615 மிமீ பெற்றுள்ளது. இந்த காரின் உயரம் நெக்ஸானுக்கு இணையாக அமைந்துள்ளது. 187 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 370 மிமீ தண்ணீரில் பயணிக்கும் திறனை பெற்றதாக விளங்குகின்றது. பின்புற அமைப்பில் எல்இடி டெயில் விளக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
Dimensions | Tata Punch |
---|---|
Length | 3827 mm |
Width | 1742 mm |
Height | 1615 mm |
Wheelbase | 2445 mm |
Ground Clearance | 187 mm |
பன்ச் எஸ்யூவி காரிலும் இடம்பெறுகின்றது. இந்த இன்ஜின் ஆப்ஷனை பொறுத்தவரை, 86hp பவர், 113Nm டார்க் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும்.
6.5 வினாடிகளில் பன்ச் கார் 0-60 கிமீ வேகத்தை எட்டும், 0-100 கிமீ வேகத்தை 16.5 வினாடிகளிலும் எட்டும் என டாடா மோட்டார்ஸ் அறிக்கையில் குறிப்பட்டுள்ளது.
டாப் வேரியண்டில் மிதக்கும் வகையிலான 7.0 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7.0 இன்ச் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற அம்சங்களுடன் மிகவும் தாராளமாக இடவசதியை கொண்டிருக்கின்றது. IRA இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம், தானியங்கி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப், மழை உணர்ந்து செயல்படும் வைப்பர்கள் மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப். பாதுகாப்பு அம்சங்களில் இரட்டை முன் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் பிரேக் ஸ்வே கண்ட்ரோல் (Brake Sway Control), இபிடி, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவை அடங்கும்.
Tata Punch விலை பட்டியல்
2021 TATA PUNCH PRICE (EX-SHOWROOM, INDIA) | ||
---|---|---|
Variant | Manual | AMT |
Pure | Rs 5.49 லட்சம் | – |
Adventure | Rs 6.39 லட்சம் | Rs 6.99 லட்சம் |
Accomplished | Rs 7.29 லட்சம் | Rs 7.89 லட்சம் |
Creative | Rs 8.49 லட்சம் | Rs 9.09 லட்சம் |