புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா நிறுவனத்தின் XUV700 எஸ்யூவி காரின் விலையை ரூ.10,000 முதல் அதிகபட்சமாக ரூ.50,000 வரை உயர்த்தியுள்ளது. முதல் 25,000 கார்களை ரூ.11.99 லட்சம் முதல் ரூ.22.89 லட்சம் வரை வெளியிட்டிருந்தது.
நேற்றைக்கு முன்பதிவு துவங்கப்பட்ட 57 நிமிடங்களில் முதல் 25,000 கார்களுக்கு முன்பதிவு நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்த முன்பதிவு அக்டோபர் 8 ஆம் தேதி முதல் துவங்குகின்றது. மீண்டும் இன்றைக்கு முன்பதிவு துவங்கப்பட்ட சில மணி நேரங்களில் 50,000 என்ற இலக்கை கடந்துள்ளது. எனவே, புதிய விலை பட்டியலை மஹிந்திரா வெளியிட்டுள்ளது.
200 ஹெச்பி பவரை வழங்குகின்ற எம் ஸ்டோலின் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. அடுத்தப்படியாக, 2.0 லிட்டர் எம்ஹாக் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் 155 ஹெச்பி பவர், 350 என்எம் டார்க், இரண்டாவதாக 185hp மற்றும் 420Nm (450Nm ஆட்டோமேட்டிக்) என இரு விதமான பவர் ஆப்ஷனை டீசல் என்ஜினில் பெற்று 6 வேக ஆட்டோ மற்றும் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கிடைக்க உள்ளது.
Mahindra XUV700 விலை பட்டியல்
Mahindra XUV700 Prices | Petrol | Diesel |
---|---|---|
Mahindra XUV700 MX | ₹ 12.49 lakh | ₹ 12.99 lakh |
Mahindra XUV700 AX3 MT | ₹ 14.49 lakh | ₹ 14.99 lakh |
Mahindra XUV700 AX3 AT | ₹ 15.69 lakh | ₹ 16.69 lakh |
Mahindra XUV700 AX5 MT | ₹ 15.49 lakh | ₹ 16.09 lakh |
Mahindra XUV700 AX5 AT | ₹ 17.09 lakh | ₹ 17.69 lakh |
Mahindra XUV700 AX7 MT | ₹ 17.99 lakh | ₹ 18.59 lakh |
Mahindra XUV700 AX7 AT | ₹ 19.59 lakh | ₹ 20.19 lakh |
Mahindra XUV700 AX7 Luxury MT | NA | ₹ 20.29 lakh |
Mahindra XUV700 AX7 Luxury AT | ₹ 21.29 lakh | ₹ 21.89 lakh |
Mahindra XUV700 AX7 AT AWD | NA | ₹ 22.99 lakh |
Mahindra XUV700 AX7 Luxury AT AWD | NA | ₹ 22.89 lakh |