பிரசத்தி பெற்ற எக்ஸ்ட்ரீம் 160 ஆர் பைக்கின் அடிப்படையிலான டிசைன் தாத்பரிங்களை பின்பற்றி சிறப்பு எடிசன் மாடலாக ஹீரோ எக்ஸ்ட்ரீம் ஸ்டெல்த் அடுத்த சில நாட்களில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது விற்பனையில் கிடைத்து வருகின்ற எக்ஸ்ட்ரீம் 160 ஆர் பைக்கில் உள்ள வடிவத்தினை சார்ந்ததாக உருவாக்கப்பட்டுள்ள புதிய எக்ஸ்ட்ரீம் ஸ்டெல்த் மாடலில், நேர்த்தியாக ட்யூன் செய்யப்பட்டு மிக சிறப்பான முறையில் அதிகபட்சமாக 8,500rpm-ல் 15.2 ஹெச்பி பவர் மற்றும் 6,500rpm-ல் 14 என்எம் டார்க் வெளிபடுத்தும். உள்ளது. குறிப்பாக அப்பாச்சி 160 பைக்கின் என்ஜின் ஆயில் கூல்டு பெற்றுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸை பெற்றுள்ளது.
முழுமையான எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் பெற்றுள்ள இந்த பைக்கில் நவீனத்துவமான டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் கூடிய ஹீரோ கனெக்ட் அம்சம் சேர்க்கப்பட்டு, டர்ன் பை டர்ன் நேவிகேஷன், அழைப்புகள், எஸ்எம்எஸ் அறிவிப்புகளை பெற இயலும்.
சமீபத்தில் எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியாகிருந்த நிலையில் இரு மாடல்களும் அடுத்த சில நாட்களில் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது.