இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய R15 V4 மற்றும் R15M என இரு பைக்குகள், மேக்ஸி ஸ்டைல் ஏராக்ஸ் 155 ஸ்கூட்டர் உட்பட கூடுதலாக ரேஇசட்ஆர் 125 ஹைபிரிட் என இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
முற்றிலும் மேம்படுத்தப்பட்ட புதிய YZF-R15 பைக்கில் க்விக் ஷிப்பட்டர், யூஎஸ்டி ஃபோர்க், ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி என பல்வேறு சிறப்பு வசதிகளை யமஹா கொண்டு வந்துள்ளதால் இளைய தலைமுறையினர் மத்தியில் தனது மதிப்பை மேலும் ஆர்15 உயர்த்திக் கொள்ள உள்ளது.
யமஹா R15 V4
புதிய YZF-R15 மிகவும் நவீனத்துவமான புதிய வடிவமைப்பைப் பெற்று முன்பக்கத்தில் புதிய ஃபேரிங் மற்றும் விண்ட்ஸ்கிரீன் சேர்க்கப்பட்டு LED ஹெட்லைட் கொடுக்கப்பட்டுள்ளது. பகல்நேர ரன்னிங் விளக்குகள், இருபுறமும் ஹெட்லைட் இணைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய YZF-R7 மாடலின் தோற்றத்தை நினைவூட்டுகிறது என்றாலும், பின்புறத்தில் R15 V3.0 மாடலில் உள்ளதைப் போன்றே அமைந்துள்ளது. ஆனால் பெரிய ஏர் டக்ட்ஸ் எக்ஸாஸ்ட் மஃப்ளர் மற்றும் பில்லியன் ரைடருக்கான கால் வைக்கும் முறைகளும் மாற்றப்பட்டுள்ளன.
யமஹா R15M
உலகளவில் விற்பனை செய்யப்படும் வழக்கமான மாடல்களில் இருந்து மாறுபட்ட கூடுதல் செயல்திறன் பெற்றவற்றை இந்நிறுவனம் வழக்கமாக M பெயரை வைத்திருக்கும்.
புதிதாக வந்துள்ள ஆர்15 எம் வேரியண்டில் நீல நிற சக்கரங்கள், வித்தியாசமான இருக்கை கவர் மற்றும் தங்க நிறத்தை பெற்ற பிரேக்குகளுடன் பிரகாசமான சில்வர் நிறத்தை கொண்டுள்ளது. இந்த பைக்கில் டிராக்ஷன் கன்ட்ரோல், க்விக் ஷிஃப்ட் உட்பட சிறப்பான பெர்ஃபானெஸை வெளிப்படுத்தும்.
யமஹா ஆர்15 வி 4 மற்றும் ஆர்15 எம் என இரண்டிலும் 155 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு SOHC ஃபியூயல் இன்ஜெக்ட் இன்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 18.3 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க்கையும் வழங்கும். VVA உடன் இந்த எஞ்சின் 6 வேக டிரான்ஸ்மிஷனுடன் ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்சுடன் இணைக்கப்பட்டுள்ளது. இரட்டை சேனல் ஏபிஎஸ் அமைப்பும் வழங்கப்படுகிறது.
Yamaha R15 V4 & R15M Price | Ex-Showroom New Delhi |
Metallic Red | Rs. 1,67,800 |
Dark Knight | Rs. 1,68,800 |
Racing Blue V4 | Rs. 1,72,800 |
Racing Blue R15M | Rs. 1,77,800 |
MotoGP R15 V4 | Rs. 1,79,800 |