ரூ.77,500 ஆரம்ப விலையில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ரைடர் 125சிசி பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்றுள்ளது.
லிட்டருக்கு 67 கிமீ மைலேஜ் தரும் என டிவிஎஸ் மோட்டார் குறிப்பிட்டுள்ள நிலையில் டிரம் பிரேக், டிஸ்க் பிரேக் ஆப்ஷனை கொண்டு மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் டெங்க், இரு பிரிவு கொண்ட இருக்கைகள் என போட்டியாளர்களான கிளாமர் எக்ஸ்டெக், பல்சர் 125 மற்றும் எஸ்பி125 பைக்கிற்கு கடுமையான சவாலினை ஏற்படுத்தியுள்ளது.
டிவிஎஸ் Raider 125
மிக சிறப்பான ஸ்டைலிங் அம்சங்களை வழங்கியுள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பெரும்பாலும் எல்இடி விளக்குகளை கொடுத்து, முரட்டுத்தனமான டேங்க் வடிவமைப்பு, ஸ்பீளிட் சிட் என குறிப்பிடதக்க அம்சங்களை ஏற்படுத்தியுள்ளது.
124.8 சிசி, மூன்று வால்வு, காற்றினால் குளிரூட்டப்படுகின்ற இயந்திரம் அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்-ல் 11.4 பிஎச்.பி பவரையும், 6,000 ஆர்பிஎம்-ல் 11.2 என்.எம் டார்க்கையும் வழங்கும். இந்த எஞ்சின் FI ஆப்ஷனை பெற்று ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் ரைடர் 125 மைலேஜ் லிட்டருக்கு 67 கிமீ என இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ரைடர் 125 மாடலின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் மூலம் கையாளப்படுகிறது. அடுத்தப்படியாக, பிரேக்கிங் அமைப்பில் 240 மிமீ டிஸ்க் அல்லது 130 மிமீ டிரம் மற்றும் பின்புறத்தில் பொதுவாக 130 மிமீ டிரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 17 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுவீல் பேஸ் 1,326 மிமீ மற்றும் இருக்கை உயரம் 780 மிமீ கொண்டு டேங்க் கொள்ளளவு 10 லிட்டராகவும், 123 கிலோ எடையைக் கொண்டுள்ளது.
ரைடரில் முழு டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு கியர் பொசிஷன் இன்டிகேட்டர் வசதியும் உள்ளது. மேலும் சில மாதங்களில் ப்ளூடூத் இணைப்பைக் கொடுக்க ஒரு விருப்பமான TFT திரையை கூடுதல் ஆப்ஷனலாக வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
TVS Raider 125 – ரூ.77,500 (drum brake variant)
TVS Raider 125 ரூ. 85,469 (disc brake variant)
All prices ex-showroom, Delhi.