வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி விற்பனைக்கு வெளியாக உள்ள ஃபோர்ஸ் கூர்க்கா எஸ்யூவி காரில் டிஃப்ரென்ஷியல் லாக்கிங் வசதியுடன் கூடிய ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் இணைக்கப்பட்டு பல்வேறு சிறப்பு வசதிகளை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கூர்க்கா எஸ்யூவி சிறப்புகள்
அக்டோபர் 15 ஆம் தேதி முதல் டெலிவரி துவங்கப்பட உள்ள கூர்க்காவின் தோற்ற அமைப்பு முன்பை போலவே வெளிப்படுத்தினாலும் பல்வேறு ஸ்டைலிங் மாற்றங்களை கொண்டுள்ளது. குறிப்பாக, நேர்த்தியான கிரில் அமைப்பு, புதிய பம்பர், அகலமான பின்புற விண்டோஸ் பெற்றுள்ளது.
இன்டிரியரில் மிக சிறப்பான டூயல் டோன் நிறங்கள் கொடுக்கப்பட்டு கிளஸ்ட்டர், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்ஷனும் இணைக்கப்பட்டு, முந்தைய பெஞ்ச் இருக்கைக்கு மாற்றாக கேப்டன் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதியுடன் ப்ளூடூத் வழியாக அழைப்புகளை இணைக்கவும், டில்ட் மற்றும் அட்ஜஸ்ட் ஸ்டீயரிங், பின்புற இருக்கைகளுக்கான தனிப்பட்ட ஆர்ம் ரெஸ்ட்ஸ், நான்கு பேருக்கும் யூஎஸ்பி சார்ஜிங் சாக்கெட்டுகள், பவர் விண்டோஸ், சென்ட்ரல் லாக்கிங், ஏர் கண்டிஷனிங், டிஆர்எல் உடன் எல்இடி முகப்பு விளக்கு, பனி விளக்கு மற்றும் கார்னிங் விளக்குகள் ஆகியவை உள்ளன.
90 ஹெச்பி பவரை வழங்குகின்ற 2.6 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் மட்டும் பெற்று 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் கொண்டிருக்கும். ஆனால் போட்டியாளரான தார் கூடுதல் பவருடன் பெட்ரோல், டீசல் இன்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக், மேனுவல் கியர்பாக்சினை பெற்று 4X4 டிரைவ் ஆப்ஷனும் உள்ளது.
பாதுகாப்பு அம்சங்களில் இரட்டை ஏர்பேக்குகள், ஏபிஎஸ், பின்புற பார்க்கிங் சென்சார்கள், ஐஎஸ்ஓ ஃபிக்ஸ் சைல்ட் சீட் லாக் மற்றும் டயர் பிரஷர் மானிட்டல் அமைப்பு ஆகியவற்றுடன் வந்துள்ளது.
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் புதிய தலைமுறை கூர்க்காவுக்கு 3 ஆண்டுகள் அல்லது 1.50 லட்சம் கிமீ உத்தரவாதத்தை வழங்குகிறது.