125சிசி சந்தையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபியரோ 125 அல்லது ரெட்ரான் அல்லது ரைடர் பைக்கின் டீசர் முதன்முறையாக வெளியாகியுள்ள நிலையில் விற்பனைக்கு செப்டம்பர் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்தியாவில் 125சிசி பைக் பிரிவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கிளாமர் 125, சூப்பர் ஸ்ப்ளெண்டர், ஹோண்டா ஷைன் 125, எஸ்பி 125 மற்றும் பஜாஜ் பல்சர் 125 போன்ற மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் டிவிஎஸ் நிறுவனம் 125சிசி பைக்கினை வெளியிடுவதனை உறுதி செய்திருந்த நிலையில் தற்போது டீசரும் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசரில் மிகவும் சக்திவாய்ந்த என்ஜினாக எதிர்பார்க்கப்படும் நிலையில் அனேகமாக 125சிசி அல்லது 150சிசி என்ஜினாக அமையலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஸ்டைலிஷான எல்இடி ஹைட்லைட் உடன் C-`வடிவ எல்இடி ரன்னிங் விளக்குகள், எல்இடி டெயில் விளக்கு, டிஜிட்டல் கிளஸ்ட்டரில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளுடன் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வெளியிடப்பட்டுள்ள டீசரில் சற்று வித்தியசமான ஸ்டைல வெளிப்படுத்தும் பெட்ரோல் டேங்க் உடன் ஸ்பிளிட் சீட் கிடைக்கப் பெற்றுள்ளதால், இரு விதமான இருக்கை ஆப்ஷனை பெறக்கூடும்.