இந்தியா யமஹா மோட்டார் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஸ்கூட்டர் மாடல்களான ஃபேசினோ 125 Fi ஹைபிரிட், ஃபேசினோ125 Fi, ரே ZR 125 Fi, மற்றும் ரே ZR ஸ்டீரிட் ரேலி 125 FI ஆகியவற்றுக்கு ஆகஸ்ட் 31, 2021 வரை செல்லுபடியாகின்ற சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் யமஹா ஸ்கூட்டரை வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2,999 மற்றும் கூடுதல் நன்மைகள் ரூ. 20,000 வரை கிடைக்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
யமஹா ஸ்கூட்டர் மாடல்களின் சலுகை விவரங்கள் பின்வருமாறு:
ரே ZR 125 Fi, ரே ZR ஸ்டீரிட் ரேலி 125 FI, ஃபேசினோ 125 Fi (Non- Hybrid version) ஆகிய மாடல்களுக்கு காப்பீட்டு பலன் ரூ. 3876/- அல்லது குறைந்த டவுன் பேமென்ட் கட்டணம் ரூ. 999 கிடைக்கும்.
அனைத்து யமஹா ஸ்கூட்டர்களுக்கும் நிச்சியக்கப்பட்ட ரூ. 2,999 மதிப்புள் பரிசுப் பொருட்கள் மற்றும் ரூ.20,000 மதிப்புள்ள சலுகளைகளை அறிவித்துள்ளது.
இந்த ஸ்கூட்டர்களில் பொதுவாக 8.2 ஹெச்பி பவரை வழங்கும் 125சிசி எஃப்ஐ என்ஜின் அதிகபட்சமாக 9.7 என்எம் டார்க் வழங்குகின்றது.