நெக்ஸான் எஸ்யூவி காரின் கீழாக நிலை நிறுத்தப்பட உள்ள புதிய HBX எஸ்யூவி அல்லது டாடா பன்ச் காரின் டீசரை முதன்முறையாக டாடா வெளியிட்டுள்ள நிலையில் விற்பனைக்கு அனேகமாக அடுத்த சில வாரங்களில் வெளியாகுவது உறுதியாகியுள்ளது.
ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்டு கான்செப்ட் நிலை மாடல் தொடர் தீவர சாலை சோதனை ஓட்டத்தை மேற்கொண்டிருந்த நிலையில் ALFA (Agile, Light, Flexible, Advanced) பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டிருக்க உள்ள ஹெச்பிஎக்ஸ் எஸ்யூவி காரில் 86 ஹெச்பி பவரை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம். இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றிருக்கும். டீசல் என்ஜின் வருகை குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை.
கான்செப்ட் நிலையில் உள்ள மாடலின் 90 % பாகங்களை உற்பத்தி நிலைக்கு எடுத்துக் கொண்டு செல்ல டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டிருந்த நிலையில் அதனை சாத்தியப்படுத்தும் வகையில் முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ரெனோ க்விட், மாருதி எஸ்-பிரெஸ்ஸோ, மஹிந்திரா கேயூவி 100 நெக்ஸ்ட் மற்றும் வரவிருக்கும் ஹூண்டாய் கேப்ஸர் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் HBX அமைந்திருக்கும்.