இந்தியா யமஹா மோட்டார் நிறுவனத்தின் 125சிசி ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் மாடலான ஃபேசினோ125 ஹைபிரிட் ஆரம்ப விலை ரூ.70,000 முதல் துவங்குகின்றது. அடுத்தப்படியாக டிஸ்க் பிரேக் பெற்ற வேரியண்ட் விலை ரூ.76,530 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
முன்பாக விற்பனையில் கிடைத்து வந்த மாடலுக்கு மாற்றாக வந்துள்ள ஃபேசினோ 125 ஹைபிரிட் ஸ்கூட்டரில் டிஸ்க் வேரியண்டில் 9 நிறங்களும், டிரம் பிரேக்கினை பெற்ற ஆப்ஷனில் 7 நிறங்களும் உள்ளன.
யமஹா ஃபேசினோ 125 ஹைபிரிட் இன்ஜின்
பிஎஸ்-6 இன்ஜினில் கூடுதலாக ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டரை (Smart Motor Generator -SMG) இணைத்துள்ளது. இதன் மூலம் சத்தமில்லாமல் ஸ்டார்ட் செய்கின்ற வசதி மற்றும் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தை செயல்படுத்துகின்றது. குறிப்பாக, மின்சார மோடடார் உதவியுடன் நிற்கும் போது அல்லது செங்குத்தான சாலை பயணத்தில் சிறிய சக்தியை வழங்குகிறது. பவர் அசிஸ்ட் செயல்பாடு செயல்பாட்டில் இருக்கும்போது கிளஸ்டரில் அறிவிப்பு கிடைக்கின்றது. மூன்று விநாடிகளுக்கு பிறகு அல்லது முன்னரே தீர்மானிக்கப்பட்ட குறிப்பிட்ட ஆர்.பி.எம் தாண்டிய பிறகு அல்லது திராட்டலை மூடினால் அசிஸ்ட் வசதி முடக்கப்படும்.
இந்த மாடலில் 8.2 ஹெச்பி பவரை வழங்கும் 125சிசி எஃப்ஐ என்ஜின் அதிகபட்சமாக 10.3 என்எம் டார்க் (முன்பு 9.7 என்எம்) வழங்குகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக ஃபேசினோ 125 ஹைபிரிட் டிஸ்க் வேரியண்டில் எல்இடி ஹைட்லைட், டி.ஆர்.எல், மற்றும் ப்ளூடூத் வசதியுடன் செயல்படக்கூடிய யமஹா மோட்டார்சைக்கிள் கனெக்ட் எக்ஸ் வசதியும் உள்ளது.